வீடு வந்ததும், சக்தி மூர்த்தியிடம் "நீங்க கிளம்புங்க நான் தேவைன்னா கூப்பிடுறேன்" என்றவன். "நான் ஒரு ஒன் ஹவர்ல வந்துடுவேன்" என்றுவிட்டு மடியில் இருந்த சுமித்ராவை பார்த்தான்.
"மித்தூ எழுந்திரி" என்று அவளை எழுப்பிவிட்டு கட கடவென காரை விட்டு இறங்கிப் போனான்.
சுமித்ரா எழுந்து வீட்டிற்குள் வருவதற்குள் சக்தி அவன் அறைக்குள் புகுந்திருந்தான்.
சுமி உள்ளே வரவும் "ஏன் சுமி, தம்பி கிளம்பிடும்மா..லஞ்ச் பண்ணிடவா?" என்றாள் சுந்தரி.
"ம்..நீங்க பண்ணுங்கம்மா மத்தியாணம் சாப்பிட்டு போகட்டும்..நான் சொல்லிப் பார்க்கிறேன்" என்றவள் "கொஞ்சம் டயர்டா இருக்கும்மா ..நானே வர்றேன் என்ன கூப்பிட வேண்டாம்" என்றாள்.
"மசக்கை அப்பிடி தான் இருக்கும் சுமி..நீ போய் படுத்துக்கோ..எதுனாச்சும் சாப்பிட்டீயா..இல்லாட்டி கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறியா?" என்றாள் சுந்தரி.
"ம்ச்..இல்லம்மா சாப்பிட்டு தான் வந்தேன்..நான் மாடிக்கு போறேன்" என்றபடி அங்கிருந்து மாடிக்கு சென்றாள்.
சக்தி மருகிப் போய் இருந்தான். நடந்ததை ஜீரணிக்க திணறிக் கொண்டிருந்தான்.சுமித்ராவின் காலடி கேட்கவும் சட்டென கட்டிலில் இருந்து எழுந்தவன் கண்ணாடி முன் சென்று ப்ரெஷில் தலையை சீவ ஆரம்பித்தான். சுமித்ராவை காணனது போல தலையை சரி பார்த்தான்.
சுமித்ரா உள்ளே வந்ததும் கதவை சாத்திவிட்டு அசந்து வந்தவள் "மணி 12 ஆக போகுது சாப்பிட்டு போ சக்தி" என்றாள் தொய்ந்த குரலில்.
"ம்..நீ ரெஸ்ட் பண்ணிக்கோ" அவளை காணாமல் சொன்னாவனை பார்த்து கொண்டே நின்றாள் சுமித்ரா.
"என்ன?" என்றான் அவன்.
"ஏன்டா..இவ்வளவு நாளா இப்பிடி இருந்தே?" என்றாள் சுமி.
"என்ன டா வா..ஏய்..என்ன..ஏதோ அப்செட்டா இருந்தே பேரை சொன்னே இப்ப என்ன 'டா'ங்கிறே..ஹோல்ட் இட்" என்றான் அவன்.
ESTÁS LEYENDO
காவலே காதலாய்...
Ficción Generalபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...