அத்தியாயம் 20

12K 345 33
                                    

மறுநாள் இருவரும் ஹாஸ்பிட்டல் சென்று , டாக்டரை பார்த்துவிட்டு வெளியே வரும் போது அந்த நர்ஸ் பிடித்துக் கொண்டாள்.பொய்யாய் முறைத்துக் கொண்டு சுமியிடம் "நீ தானே அது?" என்றாள்."எது?" – சுமி."சார் அட்மிட் ஆகியிருக்கும் போது வந்து விபுதி , பூ எல்லாம் கொடுத்தது" என்றாள் சக்தியை பார்த்து கொண்டே.

"ம்" என்றாள் சுமி கண்ணை தாழ்த்திக் கொண்டு.""அன்னிக்கு கேட்டப்போ ஏன் என்னை குழப்பிவிட்டு போனே?" என்று முறைத்தவள் "இப்ப தான் சாரை கல்யாணம் பண்ணீட்டியே? அப்ப காதல் சக்ஸச் தானே" என்றாள் சிரித்துக் கொண்டு."ம்.." என்று சிரித்து கொண்டு "சாரி சிஸ்டர்" என்றாள் சுமி."சே சே..அதெல்லாம் வேண்டாம் ஸ்வீட் கொடு, குட் நியூஸ்ஸாமே" என்றாள் சிஸ்டர் குஷியாக சிரித்து கொண்டு."ம்.." என்றபடி ஒரு மாதிரியாக ஆனது சுமியின் முகம்.சக்தி சமாளித்து கொண்டு "நாளைக்கு பக்காவா,அத்தைகிட்ட எல்லாருக்கும் ஸ்வீட் கொடுத்து அனுப்புவாங்க, இப்ப எனக்கு கொஞ்சம் டயம் ஆகிடுச்சு, அப்புறம் பார்க்கலாம் சிஸ்டர்" என்றபடி அவளை தள்ளிக் கொண்டு காருக்கு வந்தவன் , அடுத்த அரைமணி நேரத்திற்கு எல்லாம் வீடு வந்து சேர்ந்தான்.சுமி ஏனோ சுரத்தையில்லாமல் இருந்தாள், "வீடு வந்துருச்சு" என்று பின்னால் திரும்பி அவள் நினைவை கலைத்தவன், அவள் ஏதும் சொல்லாமல் இறங்கி போவதை பார்த்துவிட்டு, சற்று நேரத்தில் மூர்த்தியிடம் "தண்ணீ குடிச்சிட்டு வந்திடுறேன் அண்ணே நீங்க காரை திருப்புங்க" என்றபடி நிற்காமல் இறங்கி பின்னாடி ஓடினான்.மூர்த்தி காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு காரை திருப்பினார்.சக்தி உள்ளே நுழையவும், சுமி ஜாஸிடம் பேசிக் கொண்டிருந்தது, காதில் விழுந்தது."ம்ச்..சுமி டோண்ட் வொர்ரி..ரிப்போர்ட் அச்சா ஹே" என்றாள் ஜாஸ்."இல்ல ஒரு மாதிரி பார்த்தாங்க, ஒண்ணுமே சொல்லலை ..அதான் பயமா இருக்கு தீதி" என்றாள் கவலையுடன்."ம்ச்..ம்ம்மி வந்த்தும் கேட்கலாம்..என் ரிப்போர்டை பாரு போத் சேம் ஒன்லி..சோ வொர்ரி பண்ணாதே" என்று அவளை தேத்தினாள்.சக்தி எல்லாத்தையும் கேட்டு விட்டு காருக்கு வந்தவனிற்கு உண்மையாகவே தண்ணீர் தவித்தது. மூர்த்தி தண்ணீரை கொடுத்துவிட்டு "போகலாமா சார்" என்றார்.சக்தி ஒரு மாதிரியாக சிரித்து விட்டு "ம்" என்றான் தண்ணீரை குடித்தபடி.போலீஸ் ஸ்டேசன், உள்ளே நுழையும் போதே இன்ஸ்பெக்டர்களையும் கங்காவை கூப்பிட்டு கொண்டே அவன் அறைக்கு சென்றான் சக்தி."ம்..ஸோ ப்ளான் ரெடியா?" என்றான் அவன் சீட்டில் உட்கார்ந்தபடி."எஸ் சார்.." என்றபடி கங்கா ப்ளான் பேப்பரை அவன் முன் வைத்தாள்."சார்..ஏற்கனவே அவனை வாட்ச் பண்ண ரெண்டு காண்ஸ்டெபிள் அவன் வீட்டுக்கிட்டயும் அவனை ஃபாலோ பண்ணிகிட்டும் இருக்காங்க" என்றார் இன்ஸ்பெக்டர் சுந்தர்."கிரேட்..என்ன அப்டேட்ஸ்" என்றான் ப்ளானை பார்த்தபடி"சார் ,அவனை பிடிச்சா அண்ணாச்சியை ட்ரேஸ் பண்ணிடலாம் சார்" என்றார் சுந்தர்.கிரேட் அப்ப போகலாம் வாங்க" என்று மொத்த பேரையும் கூட்டிக் கொண்டு ஸ்பாட்டிற்கு சென்றவன் மூன்று திசையில் ஆட்களை பிரித்து நிறுத்தி, அந்த பக்கடாவை பிடித்தனர்.சக்தி காருக்கு வரும் போது மூர்த்தி வளையல் காரனிடம் பணம் கொடுத்து கொண்டிருந்தார். சக்தியை பார்க்கவும் காரை ஸ்டார்ட் செய்தவர் ஸ்டேசன் கொண்டு வந்து சேர்த்தார்.பக்கடா ஆரம்பத்தில் வாயை திறக்காவிட்டாலும், சக்தியின் ட்ரீட்மெண்டில் உண்மையை உளறினான்.வாரம் இரு முறை அவன் வரும் கரேஜ்கள் பற்றிய தகவல்கள்,கடல் நடுவே நட்த்தப்படும் போதை கைமாற்றல், எல்லாத்தையும் மேன்போக்காக, ஆனால் அவன் தெரிந்த அனைத்தையும் கொட்டினான் பக்கடா.இரவு வீடு வந்த போது சக்திக்கு மண்டை வின்னென்றது, உடையை மாற்றிக் கொண்டு சாப்பிட்டு விட்டு மறுபடியும் கிளம்பியவனை ஹேமா நிறுத்தி, "சக்தி,மறுபடியும் ஸ்டேசனா?" என்றாள்."ம்..ஆமா ஒரு அக்யூஸ்ட் இருக்கான், ஸோ நான் ஸ்டேசன்ல இருக்கிறது பெட்டர் அதான்..வருகிறேன் அத்தே" என்றபடி நகரப் போனவனிடம்."ஒரு நிமிஷம்டா, ம்..எப்பிடி.." என்றவள் அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தாள்.அத்தையின் பீடிகை சக்திக்கு புதிதாய் இருந்தது."வந்து இன்னிக்கு ஸ்கேன்ல, பேபி எல்லாம் நல்லா தான் இருக்கு.ஆனா..அவகிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இரு" என்றாள் அத்தை மெதுவான குரலில்.சக்திக்கு எரிச்சலாக, "ம்..சரி நான் வீட்டுக்கே வரலை. பத்திரமா பாத்துக்க உன் தத்து பொண்ணை" என்றவன் அடுத்து அவள் பேச இடம் தராமல் கிளம்பிச் சென்றான்."இவன்கிட்ட அவளுக்காக பேசுனது என் தப்புதான்" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் வேறு வேலையை பார்க்கச் சென்றாள்.மறுநாள் வீடு வந்தவன், மறுபடியும் டூயுட்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். சுமித்ரா கண்ணாடி வளையலை பிரித்து பார்த்து கொண்டிருந்தாள். ட்ரஸிங்கில் இருந்த டப்பாவை பார்த்து "ஏய் முதல்ல இதை எடு..இரிடேட்டிங்" என்றபடி தலையை வாரினான்."அது என்னது? எனக்கு தெரியாது.. நான் அங்க வைக்கல" என்றபடி மறுபடியும் வளையலை ஆராய்ந்தவள் தானே சென்று அதை எடுத்து வந்து திறந்து பார்த்தாள்.அதில் வளையலும் கொலுசும் இருந்தது.சக்தியை ஆழமாய் பார்த்தாள், "மூர்த்தியண்ணே வச்சிருப்பாரு" என்றான் அவளை கண்டும் காணமல்."அப்ப இதென்ன?" என்று தன்னிடம் இருந்த வளையலை காட்டினாள்.எதுவும் பேசாமல் சக்தி ஹேர்ப்ரஷை வைத்து விட்டு, கப்போர்ட்டிற்கு சென்றவன் சில பேப்பர்களை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்."என்னது இது?" – சுமி."டைவர்ஸ் பேப்பர்ஸ், சயின் பண்ணு" – சக்தி உணர்ச்சி துடைத்த குரலில்."ம்..குட்.. குடு.." என்றவள் நிதானமாக பேப்பரை படிக்க ஆரம்பித்தாள்.சக்திக்கு ஏனோ சுறுசுறுன்னு கோபம் வந்தது. சற்று நேரத்திற்கு எல்லாம் "இதுல நிறைய மிஸ்டேக் இருக்கு போலீஸ்கார், எனக்கு சில கண்டிசன் எல்லாம் இருக்கு, அது எல்லாம் இதுல சேர்த்துட்டு கொண்டு வாங்க சயின் பண்ணுறேன்" என்றாள் எகத்தளமாக."புரியல" என்றான் சக்தி."ம்..உங்க அசையும் சொத்து, ஐ மீன் உங்கப்பா ,அத்தை..அப்புறம் உங்க அசையா சொத்து மத்த ப்ராபர்ட்டிஸ், அப்புறம் உங்க சம்பளத்துல ஒரு 80 பர்சென்ட் இது எல்லாம் எனக்கு ஜீவனாம்சம்மா வேணும்..அப்ப தான் சயின் பண்ணுவேன்..ஸோ அதெல்லாம் பில் பண்ணி எடுத்திட்டு வாங்க சரியா போலீஸ்கார்" என்றாள் நக்கலாக."என்ன சுமித்ரா, திமிரு ஏறி போச்சா?" என்றான் அவன் பதிலுக்கு.பேப்பரை கட்டிலில் போட்டுவிட்டு அவன் முன் வந்தவள் "என்ன சொன்னே? திருப்பி சொல்லு" என்றாள்.சக்தி எரிச்சலாய் வேறுபக்கம் திரும்பவும்.நங்கு நங்கு என்று அவன் தலையில் மூன்று முறை கொட்டி விட்டு "சுமித்ரான்னு என் பேரை சொன்னே..பிச்சுபுடுவேன் படவா" என்றாள் சீரியஸாக,வலி தாங்காமல் "சனியனே..இடியட்..சீசீ..ஆஆஆஆ" என்றபடி தலையை தேய்த்தவன் "உன்ன வந்து பேசிக்கிறேன்" என்றபடி அங்கிருந்து நகர்ந்து வேலைக்கு கிளம்பினான்.பதினோறு மணிக்கெல்லாம் போன் வந்தது, சக்தியை அடித்துவிட்டு அந்த பக்கடா கோர்டில் இருந்து தப்பிப் போனதாக. சுமித்ராவிற்கு ஒன்றும் புரியாமல் தவித்து போனாள்.சாயங்காலம் 6 மணியிருக்கும், சக்தியை கைதாங்கலாய் மூர்த்தி அழைத்து வந்தார்."என்னப்பா, என்னாச்சு..யாரு அவன் ? எனக்கு ஒண்ணும் புரியலை" என்றாள் மூர்த்தியிடம் தவிப்பாக."ஒண்ணுமில்லம்மா, நீ பதறாதே..சார் நல்லா இருக்காரு..சும்மா கொஞ்சம் சிராய்ப்பு லேசா கையிலே வலி இருக்கிறதுனால கட்டு போட்டுருக்கோம்..நாளைக்கே சரியாகிடும்மா" என்றபடி சக்தியிடம் திரும்பி "நீங்க போய் படுங்க சார்" என்றவர். "நான் வர்றேன்மா" என்று சுமித்ராவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.சக்தி மெதுவாக மாடி ஏறிச் சென்றது ஏனோ சுமித்ராவிற்கு வலித்தது.புத்தி மலுங்கலாக, யார் பேசியதும் காதில் வாங்காமல் ரோபாட் மாதிரி சாப்பாட்டை எடுத்து கொண்டு மாடி ஏறிச் சென்றாள்.அவள் பதட்ட்த்தை பார்த்துவிட்டு ஹேமா இன்டர்காமில் சக்தியை கூப்பிட்டாள்."டேய் நான் தான்..அவ மத்தியாணத்திலே இருந்து சாப்பிடலை, யாரு பேசுறதுக்கு ரெஸ்பாண்டே பண்ணாமே உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரா..நீ அவளை கொஞ்சம் சாப்பிட வை..அவ மெடிசன் எல்லாம் எடுக்கனும்" என்றாள் அத்தை."ம்ச்..சரியான யூஸ்லெஸ்..ம்ச்.. சரி நான் பேசுறேன்" என்றபடி எரிச்சலாக போனை வைத்தான்.அவன் போனை வைக்கவும் சுமி கலக்கமாக சாப்பாட்டுடன் வரவும் சரியாக இருந்தது."சாப்பிட்டியா சக்தி..நான் வேணா கொஞ்சம்" என்று முடிப்பதற்குள்"நான் சாப்பிட்டேன்" என்றான் சக்தி பட்டென."ஓ..அப்ப நான் கொஞ்சம் பால் எடுத்திட்டு வரட்டுமா,குடிச்சிட்டு தூங்குறியா?" என்றவள் குழந்தைதனமாக."நீ முதல்ல உட்காரு, கொண்டு வந்ததை நீ சாப்பிடு " என்றான் அவளை தன் அருகில் உட்கார வைத்து."இல்ல நான் அப்புறம்.. உனக்கு முதல்ல நான் பால் கொண்டு வர்றேன்" என்று எழ போனவளிடம்."எனக்கு ம்சாலா பால் வேணும் கொண்டு வர்றீயா?" என்றான் அவளை பார்த்து."ம்..சரி" என்றாள் தயங்கியபடி அவனது தொட்டில் இட்ட கையை பார்த்து."சாப்பிட்டு போ" என்றான் சக்தி சற்று அழுத்தமாக.கொஞ்சத்தை சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்தவள் "எனக்கு போதும்" என்றபடி எழுந்து சென்று கையை கழுவி விட்டு தட்டை எடுத்து கொண்டு கீழே இறங்கினாள்.ஹேமா அவளை பார்த்து சாப்பிட்டீயா? என்றாள்."ம்" என்றவள் சுந்தரியம்மாவிடம் திரும்பி "ஒரு மசாலா பால் போட்டு தாங்கம்மா" என்றாள்."அவனுக்கு ஒன்னுமில்ல ஒழுங்கா நீ மாத்திரையை சாப்பிட்டு படு புரியுதா?" என்றாள் சுமித்ராவிடம்."ம்" என்றாள் சுமித்ரா ஏதோ நினைப்பில்."என்னவோ..போ.." என்றபடி தன்னறைக்கு சென்றாள் ஹேமா.பாலுடன் சென்ற சுமி, சக்தி அருகில் அமர்ந்தாள்."ஸாரி சக்தி, காலையிலே நீ வேலைக்கு கிளம்புறப்போ நான் விளையாட்டுதனமா உன் தலையிலே கொட்டி..ம்ச்..சாரி" என்றவள் பாலை அவனிடம் கொடுத்துவிட்டு தொட்டில் இட்ட கையை மெதுவாய் வருடினாள்.பாலை குடித்து கொண்டு அவளையே பார்த்தவன்,அவன் காயம் சிறிது அலுந்தவும் "ஸ்ஸ்..ஆஆ" என்றான்."அய்யோ சாரி சாரி" என்று பட்டென கையை எடுத்துக் கொண்டாள்."ம்.." என்றவன் பால் கிளாஸை கீழே வைத்து விட்டு "இதை கொஞ்சம் எடுத்துவிடு" என்றான் அவன் கைதொட்டிலை கண்ணால காட்டி."ம்" என்றவள் மெதுவாக பூ மாதிரி கட்டை பிரித்துவிட்டாள்.அடுத்த நிமிடம் அவளை இடுப்போடு இழுத்து அவளை அவன் மூச்சு படும் தூரத்தில் அமர்த்திக் கொண்டான் சக்தி.சுமி "அய்யோ கை.. காயம்.." என்று பதறவும். சக்தி சலனமில்லாமல் அவளையே பார்த்தான்.சுமி மெதுவாய் அவன் தலை வருடிவிட்டு "வலிச்சுதா?" என்றவள் ,அவன் முகத்தை வருடினாள். "ம்ச்.. உரைச்சுது..ம்ஹூம்..நான் நல்லா இருக்கேன்..எனக்கு ஒன்றும் இல்லை..ம்" என்றவன் அவளை உச்சி முகர்ந்து விட்டு இழுத்து அணைத்து கொண்டான் முதல் முதலாக காதல் பொங்கும் கண்களோடு.

காவலே காதலாய்...Donde viven las historias. Descúbrelo ahora