ஜாஸின் டெலிவரி டேடிட்ற்க்கு நான்கு நாட்களே இருந்தது, ஜோவி அவளுடன் இருப்பதற்காக வந்திருந்தான்.சக்தி காலையில் சற்று நேரம் ஜோவியுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு வேலைக்கு கிளம்ப வெளியில் வரும் போது ஹேமா "ஒரு நிமிஷம் சக்தி" என்று பிடித்து கொண்டாள்.
"சொல்லு அத்த" என்றான் அண்ணன் மகன்.
அந்த பக்கம் வா என்பதை கண்ணால் காட்டி அவனை சற்று லாணின் ஓரத்திற்கு அழைத்து சென்றாள் ஹேமா.
சக்தி அவளை கேள்வியாய் பார்க்கவும்,ஹேமா சற்று தயங்கிவிட்டு "ம்..ஏன் சக்தி, உனக்கு சுமித்ராவை கொஞ்சம் கூட பிடிக்கலியா.." என்றாள் மென்று முழுங்கி.
சக்தி பதில் பேசாமல் அவளை பார்க்கவும், "நல்ல பொண்ணு சக்தி, இப்ப அவ ப்ரெக்னென்டா வேற இருக்கா..அவளை உடைச்சிடாதேடா..தாங்கமாட்டா" என்றாள் உண்மையான அக்கறையில்.
"ம்ஹூம்..எங்கம்மா இல்லாதது..இன்னிக்கு தான் எனக்கு ரொம்ப தெரியுது அத்த.." என்றவன் மறுபடியும் ஒரு பெருமூச்சுடன் "எங்கம்மாவுக்கு என் நடவடிக்கை பார்த்தாலே தெரிஞ்சிருக்கும்,ம்ச்....ம்ஹூம்..ஓகே உனக்கு என்ன தெரியணும்..நான் எதாச்சும் ஹேரஸ் பண்ணி சுமித்ரா இந்த வீட்டை விட்டு கிளம்பி போயிடுவாளோன்னு பயமா இருக்கா?" என்றான் நேரடியாக.
"ம்ச்..சே..சே.." என்றவள் ஆமா என்பது தலையை ஆட்டி விட்டு வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
ஏனோ சக்திக்கு சிறிது கண் கலங்கிப் போனது, சமாளித்து கொண்டு "நானும் மனுஷன் தான் அத்த, என்கிட்டயும் வலி இருக்கு, எனக்கும் சிரிச்சி சந்தோஷமா இருக்க பிடிக்கும்.." என்றவன் சற்று நிதானித்துவிட்டு தானே தொடர்ந்தான் "மித்தூ..ஷீ அக்செப்ட் மீ வித் மை ஆட்ஸ்...நான் அவளை மிஸ் பண்ண மாட்டேன் அத்தே டோண்ட் வொர்ரி" என்றான்.
சின்ன நிம்மதியுடனும் சிரிப்புடனும் ஹேமா "நான் உன்னை கார்னர் பண்ணிட்டாதா நினைக்காதே சக்தி..நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்கடா..அதான்" என்றாள் தயங்கியபடி.
ŞİMDİ OKUDUĞUN
காவலே காதலாய்...
Genel Kurguபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...