அத்தியாயம் 19

11.7K 324 32
                                    

 மாலை மணி 5 ஐ தொட்டிருந்தது.சக்தி காபி ஷாபில் விக்ரமிற்காக வெயிட் பண்ணி கொண்டிருந்தான். போன் அடித்தது,கங்கா "சார் அந்த பக்கடாவ ட்ரேஸ் பண்ணியாச்சு,ஓவரால இரண்டு மூன்று வொர்க் ஷாப் போறான்,எங்க இருந்து ஆப்ரேட் பண்ணுறான்னு தெரியல சார்,அதான் உங்க கிட்ட இன்பார்ம் பண்ணலாம்னு கால் பண்ணினேன் சார்." என்றாள் நிதானமாக.
"ம்ம் ..கங்கா ஒன்னு பண்ணுங்க உங்களுக்கு இருக்க இன்பர்மேஷனை வச்சு ஒரு ரஃப் ட்ராப் ப்ளான் போடுங்க..நாளைக்கு நாம அத எப்படி வொர்க் பண்ணுறதுன்னு பார்க்கலாம்..ம்..எனிதிங் எல்ஸ்" என்றான்.
"ஓகே சார்..வேற எதுவும் இல்லை ,வச்சுடுறேன் சார்" என்றபடி போனை வைத்தாள் கங்கா.
சற்றும் நேரம் காபி ஷாப்பில் இருந்த போர்டுகளை படித்துக் கொண்டிருந்தான் சக்தி.
"ஹாய் மச்சி ரொம்ப நேரமாக வெயிட் பண்ணிகிறாயா" என்ற விக்ரமின் குரல் கலைத்தது.
"ம்..ஹாய் டா" என்றவன் "வந்து ஒரு ஹாப்னார் ஆச்சு..உன்ன என்கௌன்டர்ல போட்டா என்னானு தோணுது" என்றான் சக்தி நண்பனை நக்கலாய் பார்த்தபடி.
"அடப்பாவி இதுக்கு தான் என்ன வர சொன்னீயா?நான் கிளம்புறேன் ஆள விடு சாமி் " என்றபடி எழுந்திரிக்க போனவனை
"ஏ சீ உட்காரு சும்மா ஸீன் போட்டுகிட்டு..எல்லாம் உன்னால் தான் டா " என்றான் சக்தி.
"டேய் , நான் உனக்கு என்ன செஞ்சேன் என்கிட்ட எதுக்கு ஏறுரே? சரி என்ன விஷயம்னு சொல்லு..அன்னிக்கே கேட்கணும் நினைச்சேன்" என்றான் விக்ரம்.
சக்தி எதுவும் பேசாமல் இருக்கவும்,நண்பன் காபி ஆர்டர் செய்து விட்டு தான் குடிக்க ஆரம்பித்தான்.
சற்று நேரம் கழித்து ஒரு நீண்ட பெருமூச்சிற்கு பின் காபி குடிக்கும் நண்பனை பார்த்து முறைத்தான்.
காபியை குடித்து கொண்டே "அப்பிடி பார்த்தா,நீ எனக்கு என்ன லவ்வரா??..உன்ன கொஞ்சி காபி குடிக்க சொல்ல..நீ சொல்ல வந்ததை முதல்ல சொல்லு.." என்றான் நண்பன் காபி கப்பை கீழே வைத்தபடி.
"ஐயம் கோயிங் டூ டைவர்ஸ் மித்தூ" என்றான் நிதானமாக.
"வாட்" என்றான் அடுத்தவன் சற்று அதிர்ந்தபடி.
"ம்ஹூம்..ஐ கெனாட் ஹேண்டில ஹர் எனி மோர்" என்றான் சக்தி காபியை குடித்தபடி.
"ஏன்டா, சுமித்ரா நல்ல பொண்ணா தான் தெரியுது..அதுவும் இப்ப கன்சீவ்டுனு சொன்னே இப்ப போய் ..உங்கப்பா இதுக்கு ஒத்துக்குவாரா??" என்றான் நண்பன் வேகமாக.
"ம்ச் அவரை பத்தியெல்லாம் யோசிச்சா நான் எதுமே பண்ண முடியாது" என்றான் பேச்சை வெட்டும் விதமாக.
"ம்ஹூம்..அப்ப சுமித்ரா கிட்ட சொல்லிட்டீயா,அது அப்ஜெக்ட் பண்ணலையா?" என்றான் அவன் விடாமல்.
"வெயிட்டிங்னு சொன்னா" -சக்தி
"வொண்டர்புல்,அப்புறம் எதுக்கு எங்கிட்ட பேச வந்தே? யார் கிட்டயாவது நான் இதை கன்வே பண்ணணுமா?" என்றான் அவன்.
"ம்..தெரியலை..ஐயம் கன்ஃப்யூஸ்டு" - சக்தி."புரியல, நீ டைவர்ஸ்ங்கிறே, அது வெயிட்டிங்குது..அப்புறம் என்ன கன்ஃப்யூசன்?" என்றான் விக்ரம் புரியாமல்."ம்ஹூம்..ம்ச்.. எனக்கு எங்கம்மா விட்டுட்டு போன வேக்கூமை கடக்கவே நான் கஷ்டபட்டுகிட்டு இருக்கேன்..இதுல இவ வேற" என்று நெற்றியை அழுத்தி பிடித்தவன் காபியை குடித்துவிட்டு "லெட்ஸ் கோ" என்றவன் காபிக்கு பணத்தை வைத்துவிட்டு நண்பனுடன் காருக்கு வந்தவன் "நீ ஓட்டு" என்று சாவியை தூக்கி விக்ரமிடம் போட்டுவிட்டு அடுத்த பக்கம் ஏறி உட்கார்ந்தான் சக்தி.சற்று நேரம் இருவரும் பேசாமல் வண்டியில் பயணித்தனர். ஊருக்கு வெளியே வரவும் "எங்கயாவது ஓரமா நிறுத்து மச்சி" என்றான் சக்தி அமைதியாக.காரை நிறுத்திவிட்டு சக்தி நிற்கும் பக்கம் வந்த விக்ரம் " உங்கம்மாவுக்கு நீ சுமித்ராவை டைவர்ஸ் பண்ணுறதுக்கும் என்ன சம்மந்தம்னு எனக்கு சத்தியமா புரியலடா..ஏன்டா இவ்வளவு கன்ஃப்யூசன்..என்னதான் பிரச்சனை..ஜஸ்ட் ஓபன் அவுட் சக்தி" என்றான் பொறுமை இழந்து."திஸ் இடியட் லவ்ஸ் மீ மோர் நௌ" என்றான் சக்தி எங்கோ பார்த்தபடி."ஸோ வாட்ஸ் ராங் வித் தட்" – விக்ரம்."ம்..எல்லாம் உன்னால தான்டா" என்றான் சக்தி வேகமாக."நான் என்ன பண்ணிணேன், நானா அந்த பொண்ணை உனக்கு கரெக்ட் பண்ணி கொடுத்தேன்.நீ அவங்கப்பாவ போட்டுட்டு" என்று அவன் சக்தி முகத்தை பார்க்கவும் அவன் முறைத்தான், விக்ரம் உடனே "ஓகே.ஓகே சாரி மச்சி..உன் ப்ளான் சொதப்பி அவங்க பேமிலியே போயி, நீ அவளை கல்யாணம் பண்ணிகிட்டே..அதுக்கும் நீ உங்கம்மாவ பத்தி ஃபீல் பண்ணுறதுக்கும் என்னடா சம்மந்தம்? நான் இதுல எங்க வந்தேன்?" என்றான் அவன்."ம்ச்..நீ தானே அன்னிக்கு சொன்னே மித்தூவுக்கு பிடிச்ச் இட்த்துக்கு கூட்டிட்டு போக சொல்லி..ம்ச்..அன்னிக்கு தான் அவங்க வீட்டு கீ ரெகவர் பண்ணிணேன் ஸோ அங்க கூட்டிட்டி போனேன்" என்றான் அடிகண்ணில் நண்பனை பார்த்தபடி.விக்ரம் சிரித்து கொண்டு "நான் எதார்த்தமா உங்க நிலமை தெரியாமே சொன்னேன்..உனக்கு தான் அவளை டைவர்ஸ் பண்ண்ணும் தோணுதுல்ல அப்புறம் எதுக்கு அவளை கூட்டிட்டு போனே? சரி கூட்டிட்டு போயிட்டே..அங்க என்ன பிரச்சனை ஆச்சு?" என்றான்."ஷீ வாஸ் ப்ரோகன் பேட்லீ..ம்ச்..ஐ மேடா பிக் மெஸ் னு எனக்கு அப்ப தான் புரிஞ்சுது..ஐ ஃபெல்ட் தி பெயின் புவர் மித்தூ" என்றவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்."இன்னும் கூட எனக்கு இதுல க்ளாரிட்டி கிடைக்கலை மச்சான்..யூ கோ அஹெட்" என்றான் விக்ரம் பொறுமையாக.சக்தி அவனை பார்த்துவிட்டு "எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே ஷீ ஹேட் க்ரஸ் இன் மீ.." என்றவன் தொடர்ந்து நடந்தவைகள் அனைத்தையும் சொல்லி முடித்து ஒரு பெரு மூச்சு விட்டான் சக்தி."ம்..ஸோ நௌ யூவாண்ட் டூ டைவர்ஸ் ஹெர் ரைட்? அது நடக்காது சக்தி" என்றான் விக்ரம் பட்டென.சக்தி புரியாமல் அவனை பார்த்து விழிக்கவும்"சுமித்ராவ பத்தி எனக்கு தெரியாது சக்தி , ஆனா நீயும் நானும் ஒரு 5 இயர்ஸா ப்ரெண்ட்ஸ், நாம மீட் பண்ணின புதுசுல உங்கம்மாவை பத்தி நீ நிறைய பேசுவே..பட் ஓவர் த டயம் யூ ஸ்டாப்டு..ஐ தாட் யூ மூவ்டு ஆன்..ம்ச்..இவ்ளோ காம்பிளிகேட்டா நான் எக்ஸ்பெக்ட் பண்ணல சக்தி..ம்ஹூம்..சுமித்ரா உன் புத்தியிலே மித்தூவா பதிஞ்சு போயிட்டா சக்தி, உன்னால அவளை விட முடியாது..யூ ஸ்டார்டட் டூ லவ் ஹர்..அத நீ முதல்ல ஒத்துக்கோ" என்றான் விக்ரம்."நோ..நோ ஐயம் நாட் ஐ ஜஸ்ட் பிட்டி ஹர்" என்றான் சக்தி அவசரமாக."எனக்கு என்னன்னா..அவளுக்கும் லைப் இருக்கு, லெட் ஹர் லிவ் இட் ஹேப்பிலினு தோணுது அதான் டைவர்ஸ்..ம்ச்..என்னால கஷ்டபட்டுட்டா.." என்றான் சக்தி."ம்ஹும்..அப்ப அவ டைவர்ஸ்க்கு அப்புறம் ரீமேரேஜ் பண்ணிகிட்டாலும் பிரச்சனை இல்ல உனக்கு" என்றான் கேள்வியாக விக்ரம்."ம்ச்.." என்ற சக்தி வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்."ம்ம்.. ஸோ ஓகே லெட்ஸ் டூ திஸ், நீ போய் டைவர்ஸ் பேப்பர்ஸை சுமித்ராகிட்ட குடு, அவ பேசாமே வாங்கிட்டான்னு வச்சுக்கோ, அப்ப உனக்கு கோவம் வந்தா யூவார் ப்ளாட்டன்ட் அர்த்தம்..திஸ் இஸ் பிட்வீன் யூ அன் மீ ஓகே.." என்றான் விக்ரம்."இது என்ன சின்ன பசங்க விளையாட்டா? எதுக்கு இப்ப என்னை கன்விங்க்ஸ் பண்ண பார்க்கிறே?" என்றான் சக்தி."ஏன்னா..ம்..நம்மள அப்பிடியே அக்செப்ட் பண்ணிகிற பார்ட்னர் எப்பவும் எல்லாருக்கும் வாய்க்காது சக்தி, உனக்கு சுமித்ரா கிடைச்சிருக்கா டோண்ட் லூஸ் ஹர்" என்றான் விக்ரம் நிதானமாக அதே சமயம் பொட்டில் அடித்தபடி."ம்ஹூம்..நாம கிளம்பலாம் இட்ஸ் கெட்டிங் லேட்..ம்..என் பிரச்சனையிலே உன்ன பத்தி கேட்காமே விட்டுட்டுடேன்" என்றான் சக்தி."ஆல் குட் இந்த வாரம் தான் கொஞ்சம் விருந்துல இருந்து ப்ரீயானோம்" என்றான் விக்ரம்."கிரேட் அப்ப நெக்ஸ்ட் வீக் எங்க வீட்டுக்கு வாடா..அப்பா உன்கிட்ட பேச சொல்லி ஒரு வாரம் ஆச்சு..ம்ச்..நான் தான் விட்டுட்டேன்.." என்றான் சக்தி."ம்..உன்கிட்ட சொன்ன கொடுமைக்கு தண்டனையா இது..என்றவன் சிரித்துக் கொண்டு "ஓகே சுதாகிட்ட கேட்டுட்டு டூ டேஸ்ல சொல்லுறேன்டா சரி வா கிளம்பலாம்" என்றவனோடு சக்தியும் கிளம்பி வீடு வந்து சேரும் போது மணி 9 ஐ தொட்டிருந்தது. உள்ளே நுழையும் போதே அத்தை சுமித்ராவிடம் பேசிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது."ம்ச்..ஃப்ர்ஸ்ட் செக்கப் சுமி, ஏன் இப்பிடி பண்ணுறே நீ?நாளைக்கு என் கூட வா..நானே உன்ன கூட்டிட்டு போயிட்டு செக்கப் முடிச்சிட்டு அனுப்பி வைக்கிறேன்" என்றாள் ஹேமா."ம்" என்றாள் சுமி சுரத்தையில்லாமல்.சக்தி உள்ளே வந்து "என்னாச்சு அத்த?" என்றான்."ஃப்ர்ஸ்ட் செக்கப் இன்னிக்கு இவளுக்கு போட்டு வர சொன்னா மேடம் வரல..இப்ப கேட்டா பதிலே இல்ல..உங்க ரெண்டு பேரு பிரச்சனையை அந்த குழந்தை மேல திணிக்காதீங்க சக்தி" என்றாள் ஹேமா."ம்ச்..நான்..என்ன.. சரி ஓகே விடு நாளைக்கு நான் அவளை செக்கப் கூட்டிட்டு வர்றேன்..போதுமா" என்றான் சக்தி."ஓகே தட் சவுண்ட்ஸ் கிரேட்..நாளைக்கு ஒரு 8.30க்கு அங்க இருக்க மாதிரி பார்த்துக்கோ" என்றவள் மெலிதாக சிரித்த சுமியை பார்த்து "நல்ல ஹஸ்பண்ட் நல்ல வொய்ஃப் டா நீங்க" என்றபடி தன் அறைக்கு எழுந்து சென்றாள் ஹேமா.சக்தி சுமித்ராவிடம் திரும்பி "கெட் மீ சம் ப்ளெயின் மில்க்.. எனக்கு ஏர்லி மார்னிங் ரோமிங் டூயுட்டி இருக்கு" என்றுவிட்டு மாடியில் இருக்கும் அவன் அறையை நோக்கி சென்றான்.சுமி சிரித்து கொண்டே அவனுக்கு பின்னால் பால் எடுத்துக் கொண்டு சென்றாள்.

காவலே காதலாய்...Tempat cerita menjadi hidup. Temukan sekarang