அடுத்த ஒரு மாதத்தில் திருமணம் பெருமாள் கோவிலில் எளிமையாக நடைபெற்றது. சுமியிடம் பழகியபடியால், பாதி போலீஸ் குவார்ட்டஸ் குடும்பத்தார் கலந்து கொண்டார்கள். விக்ரம் மாப்பிள்ளை தோழனாய் சக்தியுடன் திரிந்தான்.
"டேய் மச்சி , அண்ணி எப்பிடி? நல்லா பேசுறாங்களா?" என்றான் விக்ரம்.
"அண்ணியா? அது யாரு?" இது சக்தி.
"டேய் சுமித்ரா தான்டா ?!!" என்றான் அவன்.
"அடச்சீ ,சுமித்ரானே கூப்பிடு, அண்ணி ப**னுட்டு" என்றான் சக்தி.
"ஏய் என்னடா நீ, சரி விடு நான் சுமித்ரானே கூப்பிடுறேன். ஆமா உன்னை பார்த்தா புது மாப்பிள்ளை மாதிரியா இருக்கே? என்னமோ சோரூமில் போய் புது வண்டி எடுக்க போற ஆளு மாதிரி இருக்கே?அந்த பொண்ணு என்னடான்னா இங்க வந்ததில் இருந்து உன்ன தேடிக் கூட பார்க்கலை..ஏய்ய் ஆல் குட் தானே??" என்றான் நண்பன்.
"டேய் ரொம்ப போலீஸா இருக்காதே, சரி கூப்பிடுறாங்க வா போகலாம்" என்றபடி மணவறைக்கு வந்தான். அடுத்த சில நிமிடத்தில் சுமித்ரா மணவறைக்கு வந்தாள்.அடுத்த சில நிமிடங்களில் சுமித்ரா கழுத்தில் சக்தி தாலி கட்டினான். சுமித்ராவிற்கு ஏனோ அவன் கண்ணை பார்க்க வேண்டும் போல் இருந்தது. பார்க்கவும் செய்தாள். அவன் கண்ணில் ஏதோ அலட்சியம், கடமை முடிந்த திருப்தி எல்லாம் இருந்தது. அவள் தேடிய காதலை தவிர.தனக்கு தானே மனதிற்குள் தட்டி கொடுத்து கொண்டு 'வேண்டாம் சுமி, இவனுக்காக ஒரு நிமிஷம் கூட இறங்காதே..இவனாச்சு நீயாச்சு' என்று கூறிக் கொண்டு சடங்குகளை முடித்து விட்டு நெருங்கிய உறவினர்களோடு சக்தியின் வீடு வந்து சேர்ந்தனர்.
சற்று நேரம் கழித்து முத்துகுமரன்,ஹேமாவிடம் "நீங்க லஞ்ச் முடிச்சிட்டு ரெடியாகிடுங்க ஹேமா, நம்ம ஆபீஸர் கிளப்பில் நடக்கும் மேரேஜ் பார்ட்டிக்கு, ஒரு 6 மணிக்கு நீங்க அங்க இருந்தா போதும்" என்றார்.
அங்கு வந்த சக்தி, "ஐயம் டயர்ட் ஐ நீட் ரெஸ்ட்...ம்ம்..நாங்க ஒரு 6.30 க்கு வந்திட்டு அரௌண்ட் 8 க்கு வீட்டுக்கு வந்திடுறோமே..ப்ளீஸ்" என்றான்.
YOU ARE READING
காவலே காதலாய்...
General Fictionபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...