சக்தி ஊருக்கு போய் 2 நாட்கள் போயிருந்தது,சுமி அவனை கூப்பிட முயற்சித்து தோற்று போயிருந்தாள். சக்தி போன் எடுப்பதாய் இல்லை.சுமிக்கு ஏனோ சக்தியின் குரலை கேட்காமலும் , நடமாட்டத்தை பாராமல் மனசு சோர்ந்து போயிருந்தது. ஹேமா கட்டாயபடுத்தி அவளை சற்று நேரம் லானில் காற்றாட இருக்க வைத்தாள். அன்று ஹேமாவிடம் ரொம்ப கேட்டு, அவளின் மாடி அறைக்கு போனாள். சக்தியின் கப்போர்டை திறந்து வைத்து கொண்டு தானே தனியாக பேசினாள்.
'என்ன போலீஸ்கார், போனே எடுக்க மாட்டேங்குறே, எனக்கு உன்கிட்ட பேசனும்டா..ம்ச்..போனை எடேன்...ம்ச்..கஷ்டமா இருக்கு சக்தி..ப்ளீஸ்டா' என முடிக்கும் போது கண்ணில் தண்ணீர் வந்திருந்தது. ஏதோ மனசுக்கு ஒரு மாதிரியாக இருந்தது, அவன் உபயோகிக்கும் செண்ட் பாட்டில் ஒன்றை கையில் எடுத்து கொண்டு மெதுவாய் கீழே இறங்கினாள். இரண்டு படி இருக்கும் போது சட்டென நிலை தடுமாறி வயிற்றின் ஓரத்தில் அடிபட கீழே விழுந்தாள் சுமி, கையில் இருந்த பாட்டில் தெறித்து ஒரு ஓரத்தில் விழுந்து உடைந்து போனது.
"அய்யோ அம்மா,ஐயா யாராவது வாங்களேன்" என்று சுந்தரி ஓங்கி குரல் கொடுக்கவும், இரு பெரியவர்களும் ஓடி வந்து விழுந்து கிடந்த சுமித்ராவை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினார்கள்.
சக்திக்கு சொல்வதற்கு பெரும் முயற்சி எடுத்தும் பலனில்லை,கடைசியில் 'கால் பேக் அர்ஜெண்ட்' என்ற மெஜேஜூடன் சுமியை கவனிக்க ஆரம்பி்த்தாள் ஹேமா.
வயிற்றில் அடி பட்டதால் உடனே ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடு த்தார்கள்,சக்தி யும் சுமியும் ஆசை பட்டது போலவே ஆண் குழந்தை பிறந்தது.ஆனால் காண சுமி நினைவில்லாமல் கோமாவில் கிடந்தாள்,சக்தியை யாராலும் தொடர்புகொள்ள முடியாத தூரத்தில் இருந்தான்.
நீண்ட போராட்டத்திற்கு பின் ஒருவாராக அண்ணாச்சியை பல கோடி மதிப்புள்ள போதை பொருட்களுடன் சக்தி பிடித்தான். கடலில் இருந்து அவனை கரைக்கு கொண்டு வந்து ஸ்டேஷனிற்கு கூட்டிச் செல்லும் போதே அவன் மொபைல் சிக்னலில் உயிர் பெற்று மிஸ்டு கால், மெசேஜ் என அவன் பை அதிர்ந்து கொண்டே இருந்தது.
BẠN ĐANG ĐỌC
காவலே காதலாய்...
Tiểu Thuyết Chungபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...