அத்தியாயம் 25

12K 334 44
                                    

அன்று திடீர் என சுமித்ராவின் வீட்டருகில் இருந்த பெண்கள் சிலர் இரண்டு மூன்று குடையோடு வந்து சேர்ந்தனர்.,சுமித்ரா ஆச்சரியத்தின் உச்சியில் "அத்தே..என்ன எல்லாரும் ஹய்யோ..நல்லாயிருக்கீங்களா? ஏ ரேவதி..எப்பிடியிருக்கே?" என்றாள் சந்தோஷம் கொள்ளாமல்.

முத்துகுமரன் சிரித்து கொண்டே சுமித்ராவையும் வந்திருந்தவர்களையும் கேள்வியாய் பார்த்தார்.

சுமித்ரா அவர்களை அழைத்து வந்து "மாமா ..இவங்க எல்லாம் எங்க பக்கத்துல இருக்காங்க" என்றவள் வந்தவர்களிடம் திரும்பி "இது எங்க மாமா" என்றவள் ஹேமாவை காணவும் "இவங்க பெரியம்மா, மாமாவோட தங்கச்சி" என்றவள் மறுபடியும் அவர்களிடம் "என்ன திடீர்னு எல்லாரும் வந்துருக்கீங்க? எதாவது விசேஷமா?" என்றாள் ஆச்சிரியம் மாறாமல்

ரேவதியின் தாய் "ஏனில்லாமே? அதிருக்கட்டும் நீ சொல்லு எத்தன மாசம்?" என்றாள் சுமியின் வயிற்றை தடவியபடி.

"ம்..அது ஏழு" என்றவள் சுதாரித்து கொண்டு "அத்தே..இதுக்கு தானா..உங்களுக்கு எப்பிடி தெரியும்..அன்னிக்கு கூட" என்று திணறியவளை வந்த பெண்களில் ஒருத்தி நிறுத்தி "அது என்னத்துக்கு இப்ப..நீ உட்காரு உனக்கு ஏழு சோறு செஞ்சு எடுத்திட்டு வந்திருக்கோம்." என்றாள் அவள்.

"அய்யோ அத்த இப்பவா?"

"ஏன் பின்ன எப்ப? ஏ ரேவதி நீ அவளை அழைச்சிட்டு போயி நல்லதா ஒரு பட்டு புடவை கட்டி அழைச்சிட்டு வா" என்று மகளை விரட்டியவள் ஹேமாவிடம் திரும்பி "தப்பா எடுத்துக்காதீங்க தட்டு தாம்பாளம் எல்லா குடுத்தீங்கன்னா, கொண்டு வந்ததை நாங்க எடுத்து வச்சிடுவோம்" என்றாள்.

"இதோ தர்றேன்ங்க" என்றவள் "சுந்தரி" என்று குரல் கொடுத்தாள்.

சற்று நேரத்திற்குள் எல்லாம் ரேவதி, சுமித்ராவிற்கு பட்டுபுடவை கட்டி கூட்டி வந்திருந்தாள்.

ஒரு குட்டி வளைகாப்பு போல வந்திருந்த பெண்களே செய்துவிட்டு, சுமித்ராவிற்கு சோறு ஊட்டிவிட்டு பவுன்காசு ஒன்று வைத்து கொடுத்தார்கள்.

காவலே காதலாய்...Where stories live. Discover now