அத்தியாயம் 12

11K 316 33
                                    

மறுநாளில் இருந்து அவன் கேட்கும் எல்லாம் அவன் அவளை கூப்பிடும் முன்னே வைத்துவிட்டு அவன் கண்ணில் படாமல் இருக்க பழகினாள் சுமித்ரா. அப்போதும் சாப்பிட டயனிங் வரும் போது எல்லாம் அவளை பார்த்து நக்கலாய் சிரிப்பதும், இரவில் தூங்கும் முன் அவளிடம் மோகமாய் பேசுவதும் என இருந்தான் சக்தி.

அந்த ஓட்டம் சற்று அவளை அந்த வீட்டுடன் ஒட்ட வைத்து இருந்தது. ஹேமாவுடன் அவளது நெருக்கம் அதிகரித்து இருந்தது. ஆனால் மேடம் மட்டும் மாறவில்லை."என்னை பெரியம்மா னு கூப்பிடலாம் இல்ல?" என்றாள்.
சுமி, "எனக்கு கூப்பிடணும்னு தோணும் போது கூப்பிடுறேனே?" என்றாள் இலகுவாக.

"என்னவோ செய்" என்று சிரித்து கொண்டாள் மற்றவள்.

அன்று சாயங்காலம் விக்ரம், அவன் கல்யாணத்திற்கு கூப்பிட வீட்டிற்கு வந்தான்.

சுமித்ரா அவனை இனம் கண்டு கொண்டு "வாங்க, உள்ள வாங்க நல்லாயிருக்கீங்களா?" என்று பாந்தமாக அவனை வரவேற்றாள்.

"நான் யாருனு ஞாபகம் இருக்கா?" என்றான் அவன் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தபடி.

"ம்..அவரு ஃப்ரெண்ட், கல்யாணத்திலே அவர் கூடவே இருந்தீங்களே, பேரு தெரியாது?"என்று சிரித்தாள்.

"விக்ரம்மா, எங்க அங்கிள் இல்லியா?" என்றான்.

"இதோ கூப்பிடுறேன்" என்றவள் கிச்சனுக்கு சென்று ஜூஸ் எடுத்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு மாமனாரை கூப்பிடச் சென்றாள்.
அவர் வரும்போதே "ஹேய் விக்ரம், என்ன ஆளையே கானோம் எப்பிடி இருக்கே?" என்றார்.

"குட் அங்கிள், எனக்கு கல்யாணம் அதான், உங்களை எல்லாம் இன்வயிட் பண்ணலாம்னு வந்தேன்" என்றான் விக்ரம்.

"அடிசக்கை, பொண்ணு யாரு?"

"சொந்த அத்தை பொண்ணு தான்" என்றான் அவன் சிரித்து கொண்டு.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹேமா வந்து சேர்ந்தாள்.அவன் கையில் இன்விடேசன் இருப்பதை பார்த்துவிட்டு, "என்ன கல்யாணமா?" என்றவள் உள்ளே திரும்பி சுந்தரி என்று ஒரு குரல் கொடுத்துவிட்டு அவர்களோடு உட்கார்ந்தாள்.

காவலே காதலாய்...Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ