அத்தியாயம் 26

11.6K 321 68
                                    

அன்று காலை, சக்தி தயங்கியபடியே சுமித்ராவை பார்த்து கொண்டே வேலைக்கு கிளம்பினான். டிபன் சாப்பிட கீழே வந்தவன், என்றுமில்லா அதிசியமாக அப்பாவும் அத்தையும் சாப்பிட உட்கார்ந்திருப்பதை காணவும் சற்று செருமிக் கொண்டே "என்ன அப்பா, இவ்வளவு எர்லியா? எங்கேயாவது வெளியே கிளம்புறீங்களா?" என்றான்.

"ம்..ஆமா சக்தி, பிரியாடிக் டெஸ்ட்க்காக உங்க அத்தையோடு ஹாஸ்பிட்டல் கிளம்புகிறேன்" என்றார் சாப்பாட்டை சுவைத்தபடி.

சுமித்ரா, சக்திக்கு பரிமாறினாள், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு "அப்பா...வ..வந்து நா ஒரு ஒன் வீக் தூத்துக்குடி வரைக்கு போகவேண்டியது இருக்கு..ஒரு இம்பார்ட்டண்ட் விஷயமா" என்றான் தட்டை பார்த்து சாப்பிட்டபடி.

அங்கிருந்த மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். "என்னம்மா சுமி என்ன சொல்லுறான் இவன்? உங்கிட்ட எதாவது சொன்னானா?" என்றார் மருமகளிடம்.

"ம்..சொன்னாரு மாமா..இப்ப தான்..போகட்டும் மாமா..ஏதோ இம்பார்ட்டண்ட் கேஸா இருக்கும்" என்றாள் சுமித்ரா சாதரணமாக.

சக்தி சுமித்ராவை ஒரு பார்வை பார்த்தான்.

"ம்..அதுகில்ல நீ இப்பிடி இருக்க நேரத்திலே?" என்று இழுத்தார் பெரியவர்.

"ம்ச்...ப்பா ஒன் வீக் தான்பா..ப்ளீஸ்.. நான் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணிருக்கேன்..நீங்க எல்லோரும் கொஞ்சம் கான்சியஸா இருங்க அவ்வளவு தான்" என்றான் மகன் சாதரணமாக.

"ம்ஹூம்..என்னவோ கேர்புல்லா இரு..எப்ப கிளம்புறே?" என்றார்.

"நாளைக்குப்பா"

"சரி ஓகே" என்றவர் அதற்கு மேல் விவாதிக்காமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்.

தானும் சாப்பிட்டுவிட்டு எழுந்து எப்பொழுதும் போல வேலைக்கு சென்றான் சக்தி.

இரவு அவன் வீடு வந்து சேரும் போது சுமித்ரா படுத்திருந்தாள், அவளை தொந்தரவு செய்யாமல் உடை மாற்றி கீழே சென்று சாப்பிட்டுவிட்டு மறுபடியும் மாடிக்கு வந்தான். சுமித்ரா சாய்ந்த மாதிரி அமர்ந்திருந்தாள்.

காவலே காதலாய்...Onde histórias criam vida. Descubra agora