அத்தியாயம் 14

11.8K 328 36
                                    

வீடு வந்து சேர்ந்ததும் வரவழைத்து கொண்ட சிரிப்புடன் உள்ளே சென்றாள் சுமித்ரா. "என்ன சுமித்ரா கல்யாணம் எல்லாம் நல்லா முடிஞ்சுதுதா? பொண்ணு எப்பிடி?" என்றாள் ஹேமா. மாடி ஏற போன சுமித்ராவை நிறுத்தி.

மாடி படியோடு லக்கேஜ்ஜை வைத்தவள், ஹேமாவிடம் வந்து "நான் உங்களை பெரியம்மான்னு கூப்பிட்டுமா?" என்றாள்.

"என்ன பெரியம்மாவா..ம்..உரிமையா..கூப்பிடலாமே.." என்றவள் புரிந்தும் புரியாததுமாய் மாடி ஏறிச் சென்ற சக்தியை பார்த்தாள்.அவன் வாயை திறக்காமல் மெலிதாய் சட்டை செய்யாத சிரிப்புடன் சென்றான்.

சுமித்ராவிடம் திரும்பியவள், "அவன் கவுத்தானா?, நீ கவுந்துட்டியா?" என்றாள் மெதுவான குரலில் ஆழம் பார்க்கும்விதமாக.

"தெரியலை" என்றாள் சுமித்ரா மெல்லிய குரலில்.

"பொய்" என்று கத்திவிட்டு அவன் அறைக்குள் நுழைந்தான் சக்தி.

இரண்டு பெண்களும் மேலே பார்த்தார்கள், சக்தி அங்கு இல்லை.சுமித்ராவிற்கு கோபம் பொங்கியது.

சுமித்ரா கடுகடுத்த முகத்துடன் தலையை குனிந்தாள்.

"ம்ச்.. என்ன சுமி? ஏன் என்னமோ மாதிரி இருக்கே? சமாதானம் ஆகிட்டா நல்லது தானே?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை அவனை.." என்று கடுகடுத்தாள்.

"மித்தூ" என்றான் சக்தி மாடியில் இருந்து.

சட்டென எழுந்தவள் "இதோ வர்றேன் பெரியம்மா" என்றபடி அவள் லக்கேஜூடன் மாடி ஏறிச் சென்றாள்.

"ம்..என்னவோ..சண்ட போட்டாலும் இதெல்லாம் எப்பிடி நடக்குதுதோ" என்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் முனகிக் கொண்டு மெலிதாய் சிரித்து கொண்டாள் ஹேமா.

சுமித்ரா உள்ளே நுழையவும்,முகம் கழுவி விட்டு கண்ணாடி முன் நின்றவன், தலையை வாரிக் கொண்டு "என்னம்மா, அன்பேக் ஆகலை" என்றபடி நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

சுமித்ரா பையை கோபத்தில் உள்ளே தள்ளிவிட்டு அவனை பார்த்து முறைத்தாள்.

காவலே காதலாய்...Donde viven las historias. Descúbrelo ahora