"என்ன?" என்றார்கள் இருவரும் ஒரு சேர.
சற்று சுதாரிப்பிற்கு பின் "ஷட் அப் சக்தி, டோண்ட் பீ ப்ளேபுல், நீ ஏற்கனவே அந்த பொண்ணுக்கு செஞ்சதே போதும், ப்ளீஸ் இதுல நீ தலையிடாதே" என்றாள் ஹேமா கோபமாக.
"ஏன் ஹேமா, என்னாச்சு? என்னைக்கும் இல்லாமே எதுக்கு சக்தியை சத்தம் போடுறே?" என்றபடி உள்ளே வந்தார் அண்ணன் முத்துகுமரன்.
"நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுறேன் , அத்த வேண்டாம் சொல்லுறாங்கப்பா" என்று கூறிவிட்டு நக்கலாக அத்தையை பார்த்து சிரித்தபடியே மாடியில் இருந்து இறங்கி வந்தான் சக்தி.
"அட, அப்பிடியா? ஏன் ஹேமா?" என்றார் அவர் சித்ரா இருப்பதை கவனிக்காமல்.
"அண்ணா, இவங்க சித்ரா..அந்த பொண்ணு சுமித்ரா இல்ல .நீ கூட என்ன ஸ்பெஷல்னு கேட்டீயே அவங்க அக்கா" என்றாள் ஹேமா.
சித்ரா மரியாதையாக எழுந்து நின்றாள். "இருக்கட்டுமா, உட்காரு" என்றபடி அவளை அமர செய்து விட்டு தானும் ஹேமா அருகில் அமர்ந்து விட்டு சக்தியையும் உட்கார செய்தார்.
"ம்..சொல்லு ஹேமா என்ன விஷயம்?" என்றார் தங்கையிடம்.
"அண்ணா , குடுமப சூழ்நிலையால் அந்த சுமித்ராவுக்கு இவங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாம் நினைக்கிறாங்க, அது பத்தி பேசிகிட்டு இருந்தோம் அப்ப தான் சக்தி இப்பிடி பேசினான்,இது எல்லாம் விளையாடுற விஷயமா அண்ணா?" என்றாள் ஹேமா."என்ன சக்தி? அவ கேட்கிறதும் நிஜம் தானே? எதுக்கு நீ இதுல தலையிட்டே?" என்றார் அவர் மகனிடம்.
"இல்லப்பா, நான் நிஜமா தான் கேட்டேன்,நானும் அந்த பொண்ணு இப்பிடி கஷ்டபடுறதுக்கு ஒரு காரணம் தானே அதான்,சரி படுத்தலாம்னு பார்த்தேன்" என்று தோளை குலுக்கிவிட்டு அத்தையை பார்த்து நக்கலாக சிரித்தான்.
"என்..என்னண்ணா இது?" என்றாள் தவித்தபடி ஹேமா.
"ம்ச்..அத்தை உனக்கு அவங்க நம்ம ஸ்டேடஸ்க்கு இல்லைனு , வேண்டாம்னு நினைக்கிறீயா?" என்றான் பட்டென்று.
ஹேமா திகைத்து போய் சித்ராவை பார்த்து "அப்பிடி எல்லாம் இல்ல" என்று திணறிவிட்டு சக்தியை பார்த்து முறைத்தாள்.
YOU ARE READING
காவலே காதலாய்...
General Fictionபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...