இன்னும் கொஞ்சம்...

14.8K 440 198
                                    

அடுத்த மூன்று மாதத்தில், சக்திக்கு டிசி ப்ரொமோஷனுடன் தூத்துக்குடிக்கு ட்ரான்ஸ்பர் வரவே, சுமியையும் குழந்தையும் அழைத்து கொண்டு தூத்துக்குடி சென்றான். முத்துகுமரனை எவ்வளவோ அழைத்தும் அவர் தங்கைக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மறுத்துவிட்டார். அதனால் முடியும் போதெல்லாம் அண்ணனும் தங்கையும் தூத்துக்குடி வந்து பேரனோடு வந்திருந்து விட்டு போனார்கள். போய் 6 மாதத்தில்,தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஒருவன் சக்தி இல்லாத நேரத்தில் வந்து சுமியையும் குழந்தையும் கடத்த முயற்சிக்கவே, சுமி அவனுடன் ஒற்றை ஆளாய் போராடி, தன்னையும் குழந்தையும் மீட்டதோடு, அவனை அடித்து உதைத்து போலீஸீலும் மாட்டியதில், அவளை பாராட்டி அந்த வருடம் கலெக்டர் அவளுக்கு அவார்டும் வழங்கினார். அந்த வட்டாரத்தில் சக்தியோடு சேர்த்து சுமிக்கு வீரமான பெண்ணாய் அடையாளம் காணப்பட்டாள். இப்பிடியே அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டமாய் குழந்தை தேவியும் பிறந்து 2 வருடங்கள் ஆகியிருந்தது. செந்தில் ஒன்றாவது சென்றிருந்தான்.

"செந்திலு, கிளம்பிட்டீயா? ஸ்கூல் பஸ் வர போகுதுடா" என்றாள் சுமி கிச்சனில் இருந்து.

சுரு சுருவென குரல் வந்த திசையில் பார்த்துவிட்டு சக்தியின் போனை கையில் வைத்து கொண்டு திறக்க முயற்சி பண்ணிக் கொண்டிருந்தான் அந்த குட்டி பையன்.

ஷேவ் பண்ணிவிட்டு வெளியே வந்த சக்தி," ஓய் , என் போனை வச்சிகிட்டு என்ன பண்ணுறே?, அம்மா அப்போ இருந்து கத்திட்டே இருக்காங்க, நீ என்ன பண்ணுறே?" என்றான் மகனிடம்.

"ம்..இந்த அம்மா வேண்டாம், எனக்கு வேற அம்மா வாங்கி குடுப்பா" என்றான் அவன்.

"என்ன?" என்று கடகடவென சிரித்த சக்தி, "ஏன்டா திடீர்னு? அம்மாவை எல்லாம் அப்பிடி மாத்த முடியாது." என்றான் பொறுமையாக மகன் உயரத்திற்கு இறங்கி உட்கார்ந்து.

"அப்ப தாத்தாவுக்கு போன் போட்டு குடு, நான் தாத்தா கிட்ட பேசணும்" என்றான் அவன் பிடிவாதமாக.

காவலே காதலாய்...Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ