காலையில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், சுமித்ரா காலுக்கு கொலுசு போட்டுக் கொண்டிருந்தாள். கண்ணாடி வழியாக அவளை பார்த்தவன், "என்ன பண்ணுறே?" என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் மூச்சு வாங்கியபடி கொலுசை போட்டாள்.
"என்னாச்சு?" என்றபடி அருகில் வந்தவன் "என்ன ஸ்வெல்லிங்?" என்றான்.
"அது அப்பிடி தான் வீங்கிக்கும் நடந்தா சரியாகிடும்" என்றால் அவனை நிமிர்ந்து பாராமல்.
"இங்க குடு" என்றவன் கையில் இருந்த ஹேர்ப்ரெஷை அவள் அருகில் வைத்துவிட்டு கொலுசை கணுக்காலுக்கு மேலே எடுத்து போட்டுவிட்டான்.
"ஹய்..ச்சே..எனக்கு இது ஸ்ரெக்கே ஆகல" என்றபடி சிரித்தாள் சுமி.
ம்ஹூம்" என்றவன் ஹேர் ப்ரெஷை எடுக்கும் முன் சுமித்ரா எடுத்து கொண்டு"ம்..திரும்பு" என்றவள் குழந்தையை பிடிப்பது போல அவன் தாடையை பிடித்துக் கொண்டு மறுகையால் அவனுக்கு தலை சீவினாள்.
"ஹே என்ன பண்ணுறே?" என்றான் சக்தி, தன் தலை மீது அலையும் சுமியின் கண்களை பார்த்து.
"ம்..ப்ராக்டீஸ்..குழந்தைக்கு தலைசீவ பழகிக்கிறேன்" என்றாள் சுமி அவனை பாராமல்.
சிரித்தவன் "ஆமா..கொலுசு ஏன் இவ்வளவு நாளா போடல, இது ஒரு டூ த்ரீ டேஸ் இருக்கும்ல" என்றான் ஆழம் பார்க்கும் விதமாக.
"ம்.." என்றவள் சீவி முடித்துவிட்டு ப்ரெஷை அவன் கையில் திணித்துவிட்டு "எங்கம்மா சின்ன வயசுல இருந்து ஒண்ணு சொல்லி கொடுத்திருக்காங்க..யாரு எதை குடுத்தாலும் வாங்க கூடாதுன்னு..அதான்" என்றாள் அவன் கண்ணை பார்த்து நக்கலாக,
"அப்ப மூர்த்தியண்ணனும் அந்த கேட்டகிரி தானா?" என்றவன் எழுந்தான்.
"இது மூர்த்திப்பா வாங்கலனு எனக்கு தெரியும்" என்றாள் அவள் இந்தமுறை ஆழம் பார்க்கும் விதமாக.
சிரித்து கொண்டவன், "ஓகே பை..நான் கிளம்புறேன்" என்று நகரப் போனவனிடம்.
YOU ARE READING
காவலே காதலாய்...
General Fictionபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...