அத்தியாயம் 9

8.5K 312 56
                                    

சித்ராவும் சுமித்ராவும் போகவும், சக்தியிடம் அப்பா "கன்கிராட்ஸ் சக்தி" என்றார்.

"ம்..தேங்க்ஸ்பா, சரி நான் டூயூட்டிக்கு கிளம்புறேன்" என்று தோளை குலுக்கிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.

ஹேமாவிற்கு அப்பிடியே பற்றிக் கொண்டு வந்தது.

சற்று நேரம் கழித்து சக்தி ரூமிற்கு சென்றவள் , காக்கி உடுப்பில் மிடுக்காய் தலை வாரிக் கொண்டிருந்தவனை பார்த்து நேராக "டேய் உண்மையை சொல்லு உனக்கு சுமித்ராவை பிடிச்சிருக்கா? அதனால தான் கல்யாணதுக்கு ப்ரோபோஸ் பண்ணினாயா?" என்றாள்.

"அய்ய சீ என்ன அத்த் இப்பிடி கேட்கிறே?" என்றான் அவன் பதிலுக்கு.

அதிர்ந்த ஹேமா "என்னது சீயா? அப்புறம் எதுக்குடா அவதி அவதியா கல்யாணத்தை கன்பார்ம் பண்ணினே?"

"அது ஒரு கால்குலேஷன் அத்த..ம்..என்னால இந்த சென்டிமெண்ட் சாங், கண்ணே மணியேனு காதல் டயலாக் எல்லாம் எவகிட்டயும் விட முடியாது..டூ பி ஹானஸ்ட் எனக்கு அது வரவும் வராது.எப்பவும் எல்லாத்துலேயேயும் ஸ்ரைட்டா தேவை ..அவ்வளவு தான்..இவ கேஸ்ல..எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிடைச்சிச்சு..ஷி ஹேட் கிரஷ் வித் மீ தெரியுமா? கேட்கவே காமெடியா இல்ல?" என்றான் அவன் சிரித்து கொண்டு.

"கிரஷ்ஸா, சுமித்ராவுக்கு உன மேலேயா?" என்றாள் அத்தை ஆச்சிரியமாக.

"ம்..யா.. ஒரு சிக்ஸ் மன்த்ஸ் முன்னாடி நான் கை ப்ராக்ச்சர்ல உன் ஹாஸ்பிட்டல்ல ஒரு ப்யூ டேஸ் இருந்தேன்ல அப்ப கூட நர்ஸ் யாரோ கொண்டு வந்து ரோஸ் விபூதி எல்லாம் கொடுத்தாங்க சொல்லி குடுத்திட்டு போனாங்களே? நீ கூட கேர்ஸ்ப்ரெண்டானு கேட்டீயே? அது இவ தான்" என்றான் சக்தி.

"ஓ..இது நிஜமாவே சர்ப்ரைஸ் தான் சக்தி, ஸோ அதனால தான் உனக்கு அவளை பிடிச்சிருக்கா?" என்றாள் சற்று சந்தோஷமாக.

"அத்த ப்ளீஸ், பிடிச்சிருக்கா அப்பிடி இப்பிடி எல்லாம் என்னை பார்த்து கேட்காதே..இட்ஸ் ஜஸ்ட் நீட் அவ்வளவு தான்..அவளுக்கு இப்ப இருக்க ப்ரெசருக்கு, ஷி கேனாட் திங்க் எனிதிங் பியாண்ட்..சராசரியா நான் சொல்லுறதுக்கும், என் தேவைக்கு ஏத்த மாதிரி நடந்திட்டும் பேசாமே இருப்பா..என்னோட ஆட்டிட்டூயூட்க்கு வேற பொண்ணா இருந்தா..கேரிங், பேரண்ட்ஸ் , பஞ்சாயத்துன்னு எதையாவது இழுத்துவிட்ருவா..இவ கேஸ்ல தான் யாருமே இல்லையே..ஸோ நான் சேஃப்..சிம்பிள் " என்றான் அவன் கூலாக.

காவலே காதலாய்...Where stories live. Discover now