நான் கோவில் வரைக்கு போயிட்டு வர்றேன் பெரியம்மா" என்றாள் சுமி.
"ம்..சரி சுமி..நான் இன்னிக்கு ஹாஸ்பிட்டல் போகலை நீ வேணா என் காரை எடுத்துட்டு போயேன்..நீ நல்ல ட்ரைவ் பண்ணுவே தானே?" என்றாள் ஹேமா.
"ம்..பண்ணுவேன்..ஆனா நாளாச்சு.." என்று தயங்கியவள் "சரிம்மா நான் கார் எடுத்துட்டு போறேன்" என்றபடி காரில் கோவிலுக்கு கிளம்பினாள்.
"பார்த்து ஜாக்கிரதையா போ" என்றபடி ஓய்வெடுக்க சென்றாள் ஹேமா.
சுமித்ராவிற்கு வண்டியை ஓட்டி வெகுநாள் ஆகியிருந்தும்,ஏனோ பழைய லாவகத்துடன் காரை செலுத்தினாள். ஏனோ மனதிற்கு புது தைரியம் பிறந்த மாதிரி இருந்தது.
அவள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலிற்குய் வந்தவள், அங்கு இருப்பவர்களிடம் சிநேகமாய் சிரித்து விட்டு சாமி கும்பிட்டு விட்டு பிரகாரம் வரும் போது, அவள் வீட்டின் அருகே இருக்கும் ரேகாவை பார்த்தாள்.
"ஏ ரேகா, எப்பிடியிருக்கே?" என்றாள் சுமி.
தோழியை வெகுநாள் கழித்து பார்த்த சந்தோஷத்தில் தன்னை மறந்து "ஹேய் சுமீமீமீ" என்று கத்தினாள் ரேகா.
"அய்யோ எப்பிடிறீ இருக்கே? ம்..கல்யாணம் எல்லாம் ஆகிடுச்சு போல சொல்லவே இல்ல" என்றாள் உரிமையாய்.
"ம்..ஆமா நீ என்ன அதிசியமா கோவிலிலே? முன்னெல்லாம் நான் கூப்பிட்டா வர கூட மாட்டே..இப்ப என்ன?" – சுமி.
"ம்..வேறா என்ன.. எல்லாம் கல்யாணம் நல்லபடியா முடியணும் தான்..வீட்ல அம்மா ஒரே இம்சை அதான் இப்ப தினமும் வர்றேன்." என்று சிரித்தாள் ரேகா.
தோழிகள் இருவரும் பேசிக் கொண்டே பிரகாரத்தின் ஒரு புறத்தில் ஓரமாய் அமர்ந்தபடி.
"ம்..அப்புறம் அம்மா அப்பாவுக்கு அப்பிடி ஆனதுக்கு அப்புறம் நீ இந்த பக்கமே வரலையே..உங்கப்பா கூட வண்டி ஓட்டின ஒருத்தர் தான் உனக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு சொன்னாரு..எங்களை எல்லாம் கூப்பிடணும் கூட தோணலைல உனக்கு?" என்றாள் ரேகா.
أنت تقرأ
காவலே காதலாய்...
قصص عامةபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...