அத்தியாயம் 3

8.6K 281 20
                                    

"டேய் அந்த பாம்பேகாரன் சரக்கு அனுப்பிட்டானா?" என்றான் அந்த ஆள்.

"ஆச்சு அண்ணாச்சி டெலிவரி தான் பாக்கி" என்றான் அவன் குமார்.

அந்த ஆள் முருகேசன், நன்கு உருண்டு திரண்ட வடிவம் முன் தள்ளும் வயிறு, புதுப்பண ஜொலிப்புமாய் நாற்பதுகளின் முதலில் இருப்பவன்.வட்டிக்கு கொடுப்பது வெளியுலகத்திற்கு அவன் செய்யும் தொழில். மற்றவை இருட்டு தொழில்கள்.கஞ்சா வாங்கி விற்பது,வெடிமருந்து சப்ளை செய்வது.பெண்கள் சம்மந்தப்பட்ட தொழிலில் லாபம் அதிகமென்றாலும் கொள்கைக்காக செய்யாமல் இருப்பவன்.போலீஸின் கண்காணிப்பு லிஸ்டில் எப்போதும் இருப்பவன்.

காத்தமுத்து அங்கு போகையில் சாயங்காலம் நாலு மணி இருக்கும்,

"சொல்லுங்க அண்ணாச்சி, போன்லயே கேட்டீங்க..காரு வாங்க 2 லட்சம் போதுமா?" என்றான் முருகேசன் ஆழம் பார்க்கும் விதமாக.

"போதுங்க.. கையில இருக்கிறதோட இது போதும் அண்ணாச்சி" என்றார் காத்தமுத்து.

"சரி எப்ப தேவைப்படும்?..இன்னிக்கே வாங்கிக்றீங்களா?" என்றான் அவன்.

"ம்..அது..காரு எடுக்க இன்னும் ஒரு ரெண்டு நாளு ஆவும்னு நினைக்கிறேன்..ம்..வட்டிடிடி" என்று இழுத்தார்.

"ம்..உங்களுக்காக மாச வட்டில போட்டு 5 வட்டிக்கு தர்றேன்..இப்ப எப்பிடியும் மாச கடைசியாயிருச்சு..பரவாயில்ல இன்னிக்கு வாங்கிக்கோங்க..அடுத்த மாசத்திலே இருந்து வட்டிய கணக்கு பண்ணிக்கலாம்..ஆனா வட்டி கரெக்டா வந்திரணும் பார்த்துக்கங்க அசல்ல கழிச்ச அதுக்கு வேணா ரசீது போட்டு தர்றேன்" என்றான் கட் அன் ரைட்டாக.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணாச்சி." என்றவர் மகிழ்வோடு பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட போனார்.

முருகேசன் குமாருக்கு கண்ணை காட்டவும் அவன் பையோடு வந்தான்.

"அண்ணாச்சி, போவுறப்போ நம்மாள கொஞ்சம் வழியிலே இறக்கிவிட்டுட்டு போயிருங்க" என்றவன் அடிப்பொடியிடம் திரும்பி "நம்மாளு ஆயிட்டாரு அண்ணாச்சி..போ போயி ஏறிக்க வுட்டுருவாரு" என்றான்.

காவலே காதலாய்...Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin