அத்தியாயம் 5

8K 275 18
                                    

காலையில் 8 மனிக்கெல்லாம் மூர்த்தி அங்கு வந்து சேர்ந்து காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அண்ணனும் தங்கையுமாக லானில் உட்கார்ந்தபடி காபி குடித்து கொண்டிருந்தனர். சக்தி அவன் அறை பால்கனியில் வந்து நின்று 'ஹாஆஆ' என்றபடி நெட்டி முறித்துவிட்டு கீழே பார்த்தான். பெரியவர்கள் இருவரும் லானில் இருப்பதை பார்த்துவிட்டு "ஹாய்பா" என்றான் அங்கிருந்தபடி.கீழே வருகிறேன் என்றபடி கையசைத்துவிட்டு வந்தான்.

அவன் வருவதற்குள் ஹேமா, "அண்ணே உன் பையன் செய்யிறது ஒண்ணும் சரியில்லை..வந்தா என்னன்னு கேளு?" என்றாள்.

"ஏம்மா, என்ன பண்ணுறான்? யாரையாவது காதலிக்கிறானா?சீக்கிரமே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்மா?" என்றார் அவர்.

"ஹய்யோ..என்ன அண்ணே நீ?அவன் காதலிச்சா தான் நல்லாயிருக்குமே..இது வேறண்ணே" என்றாள்.

"வேற என்ன ஹேமா?" என்றார் புரியாமல்.

"அவன் வர்றான் நான் பேச்சுக் கொடுக்கிறேன் நீயே கேளு"

"ம்..சரி" என்றபடி மகனை பார்த்து "என்ன சக்தி, எப்புடி போகுது வொர்க் எல்லாம்? ஆல் குட்ஹா?" என்றார்.

"எஸ்பா..ஸோ ஹெவ் எபோட் யூ?" – சக்தி

"குட் சக்தி" என்றார்.

ஹேமா தலையில் கைவைத்தபடி "அய்யோ, அப்பாவும் பிள்ளயும் பேசிக்கிறதை பாரு..தாங்கலை. இந்த மாதிரி நேரத்திலே தான் அண்ணி ஏன்டா இவ்வளவு சீக்கிரம் போனாங்கனு தோணுது"

"ம்ச்..வாட்ஸ் ராங் வித் யூ அத்த?" – சக்தி.

"ம்...சரி இப்ப சொல்லு யாரு அந்த பொண்ணு, வாட் ஆர் யூவர் ப்ளான்ஸ்..நேத்து என்னென்னவோ சொன்னே?" ஹேமா

"எந்த பொண்ணு?" சக்தி

"தட் விக்டிம்?!!"

"ஓய் ஷுட் ஐ டெல் யூ?" என்றான் சக்தி புரியாமல்.

"பார்த்தியாண்ணே" என்றாள் ஹேமா.

"ம்ச்..அத்த ப்ளீஸ் டோண்ட் மேக் சீன் , இட்ஸ் ப்யூர்லீ அப்பீஷியல்பா" என்றான் சக்தி தகப்பனிடம்.

காவலே காதலாய்...Donde viven las historias. Descúbrelo ahora