அடுத்த ஒரு வாரத்தில் வீடு வந்த ஜாஸை, அடுத்த ஒரு மாதத்திலே ஜோவி வந்து கூட்டிச் சென்று விட்டான்.மறுபடியும் வீடு ஒரு மாதிரி ஜீவனில்லாமல் போனது. சுமித்ராவிற்கு பேச்சு துணைக்கு ஆளில்லாமல் போனது.எல்லாருக்கும் அவரவர் வேலைகளில் முனைப்பாக திரிந்தனர். ஏனோ சுமித்ராவிற்கு மனசு சோர்ந்து போனது.அன்று வழக்கம் போல மூர்த்தி வந்து காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
"அப்பா" என்றாள் சுமி.
"சொல்லும்மா" என்றார் அவர்.
"அம்மா ஊர்ல இல்லியாப்பா?" என்றாள் அவள்.
"இருக்காளே..ஏம்மா வர சொல்லட்டா?" என்றார் அவர்.
"ம்..இல்..இல்லப்பா..சும்மா தான் கேட்டேன்" என்றவள் திரும்பவும்.
"சார் ரெடியாகிட்டாராம்மா" என்றார் அவர்.
"ம்..குளிச்சிட்டாருப்பா..இப்ப வந்திருவாரு" என்றுவிட்டு உள்ளே சென்றாள் சுமித்ரா.
சக்தி கிளம்பி வெளியே வரவும் மூர்த்தி அவனை கூட்டிச் சென்று ஸ்டேஷனில் விட்டுவிட்டு செவ்வந்திக்கு போன் அடித்தார்.
"என்னங்க இந்த நேரத்திலே கூப்பிட்டுருக்கீங்க" என்றாள் அவள் போனை எடுக்கவும்."வந்து நீ நம்ப டாக்டரம்மா கிட்ட பேசிட்டு சுமித்ராவை ரெண்டு நாளைக்கு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திரு" என்றார் மூர்த்தி பட்டென.
"ஏங்க எதுனாவது பிரச்சனையா?" என்றாள் அவள்."சே..சே..அதெல்லாமில்ல..இத்தினி நாளு டாக்டரம்மா பொண்ணு இருந்திச்சி..சுமித்ராவுக்கு பேச்சு துணையா இருந்திருக்கும்..இப்ப யாருமில்லாம ஒரு மாதிரி கலக்கமா இருக்கு..மாசமா வேற இருக்கு இல்ல அதான் ரெண்டு நாளைக்கு வேணா நாம வச்சுகலாம்னு நெனைச்சேன்" என்றார் அவர்.
"நானும் கூட நெனைச்சேன்..அப்புறம் அவங்க அனுப்புவங்களோ என்னவோன்னு தான் எதுவும் உங்கிட்ட கூட பேசிக்கலங்க..சரி நான் டாக்டரம்மா கிளம்புறதுக்குள்ள பேசி கூட்டியாந்துடுறேன்" என்றுவிட்டு போனை வைத்தவள். அதை செய்யவும் செய்தாள்.
YOU ARE READING
காவலே காதலாய்...
General Fictionபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...