அந்த வாரம் கடைசியில் எல்லோரும் எதிர்பார்த்தபடி ஜாஸ்மீத் ஒரு வாரத்திற்கு அவள் கணவனுடன் வந்து சேர்ந்தாள். ஹேமா வெகுநாள் கழித்து மகளை பார்த்த்தில் திக்கு முக்காடி போனாள். மகளை விட்டு பிரியாமல் பின்னாடியே திரிந்தாள்.சுமிக்கு ஏனோ ஏக்கமாக இருந்தது.ஜாஸ்க்கு சுமியை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போனது.தினமும் சற்று நேரம் சக்தியிடம் ஒரண்டை இழுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். ஜோவியும் அந்த சூழ்நிலையை சந்தோஷமாக உணர்ந்தான்.
ஜோவி பாட்டு கேட்டுக் கொண்டு லானில் நடந்து கொண்டிருந்தான். சுமி அவனிடம் சென்று "பையாஜி நமஸ்தே" என்றாள்.
"ஹரே,சுமிபென் ஆப்கோ ஹிந்தி மாலும்ஹே கியா?" – ஜோவி குஷியாக.
"ம்..தோடா பையாஜி" – அசட்டுதனமாக சிரித்துவிட்டு.
"ம்..ஆப் சே ஏக் ஆப்ளிகேஷன் பையாஜி" என்றாள் தயங்கியபடி.
"ஆப்ளிகேஷன் க்யா?" – ஜோவி.
"ம்..ஜாஸ் தீதி..இங்க..ம்..க்ருப்யா தீதி கோ உஸ்கே ப்ரசவ் தக் யகான் ரகனேதே, வோ சிர்ப் ஆப்ஹி சுனேதியா.." என்று தயங்கினாள்.
"லேக்கின் மேயின் உஸ்கேபினா நஹி ரஹ்சக்தா பெகன்ஜி" – என்றான் ஜோவி
"தீதி கோ..ம்..தீதிகீ மாகீலீயே க்ர்ப்யா உஸே யாகான் ரஹ்னே தோ பையாஜி..உஸ்கே மன் ஆப்கோ இஸ்பார்சே பூச்சோனே மே சங்கோஜ் கரத்தே ஹேன்" என்றாள் தட்டு தடுமாறி.ஜோவியின் முகம் மாறியது. சுமி சற்று மிரண்டாலும்"ம்..மாஜி..எனக்கு எப்பிடி சொல்லுறதுன்னு தெரியலை..யாரும் இல்லாமே இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும்..பிகாஸ் ஆப் மாஜி அயம் குட் நௌ..ம்.ப்ளீஸ் ஃபார் மாஜி ஹெல்ப் பையாஜி" என்று அவனை கையெடுத்து கும்பிடவும் ஜோவிக்கு ஒரு மாதிரி ஆகி போனான். எதுவும் பேசாமல் விருட்டென உள்ளேசென்று அவர்களுக்கு கொடுத்த அறைக்குள் புகுந்து கொண்டான். அங்கே தாயிற்கு மகளுக்கும் ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டனர்.சற்று நேரம் லானில் இருந்த சுமித்ரா, என்ன செய்வதென்று தெரியாமல் கிச்சனுக்கு சென்றாள்.கொஞ்ச நேரமிருக்கும், ஹேமா அங்கு வந்து "சுமி" என்றாள்.அவளை பார்க்க சற்று தயங்கிவிட்டு "சொல்லுங்க பெரியம்மா' என்றாள் கலவரமாக."நீ ஜோவிகிட்ட எதாவது பேசுனியா?""ம்..அது..அது..வந்து" என்று மென்று முழுங்கினாள்."தேங்க்ஸ் சுமி" என்றாள் ஹேமா கலங்கிய கண்களோடு கையெடுத்து கும்பிட்டு."என்னம்மா எதுக்கு " என்று அவள் கைகளை இறக்கினாள் சுமி."எங்கண்ணி இருந்திருந்தா..ஜோவி வீட்ல எனக்கு சப்போர்ட்டா பேசி ஜாஸை எங்கூட தான் வச்சுகணும் பேசிருப்பாங்க..எங்கண்ணனுக்கு அதெல்லாம் தெரியாது..நான் எப்பிடி பேசுறதுன்னு தெரியாமே தான் முழிச்சிட்டு இருந்தேன்..நீ..தேங்க்ஸ் சுமி" என்றாள் நெகிழ்வாய்."எதாவது தப்பா பேசிட்டேனாம்மா?""ஜோவி புரிஞ்சுகிட்டான்.ஜாஸை அவன் தான் கன்வின்ஸ் பண்ணிட்டு இருக்கான்" என்றாள் சந்தோஷமாக,சுமி சிரித்து கொண்டு பெருமூச்சு விட்டாள்."இந்த சக்தியும் நல்லவன் தான் சுமி, எங்கண்ணி இறந்தப்போ உரைஞ்சு போனவன் தான்..அப்புறம் யாருகிட்டயும் ஒட்டிக்கவே இல்ல..நானும் அண்ண்ணும் கூட அதை சென்ஸ் பண்ணாமே விட்டுட்டோம் அதான்..ம்ச்..நீ வேணா பாரேன் அவன் சரியாகிடுவான்" என்றாள் நம்பிக்கையாக."இல்லம்மா..எனக்கு இந்த சக்தி வேண்டாம்..ரெண்டு பேருமே நல்லா இல்ல..சீக்கிரமே நாங்க பிரிஞ்சிடுவோம் தான் எனக்கு தோணுது, அதான் நல்லதும் கூட" என்றாள் எங்கோ பார்த்தபடி."ம்ச்..கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட டயரி பத்தி சொன்னான்..நீ அவனை ஒன் சைடா லவ் பண்ணினதை பத்தி..எனக்கு என்னவோ அவனுக்கு ஏதோ அபிப்ராயம் இருக்க போய் தான் இந்த கல்யாணத்தை பண்ணிகிட்டான்னு தோணுது..கொஞ்சம் பொறுமையா இரு அவன் சரியாகிடுவான்""இல்லம்மா அதெல்லாம் இல்ல..இது..வெறும்.." என்று வார்த்தையை மென்று முழுங்கினாள்."ம்ச்..சுமி" என்று சுமித்ராவை கட்டிக் கொண்டு ஆறுதல் படுத்தினாள்.ஜோவியின் சமாதானத்திற்கு பிறகு ஜாஸ் அங்கேயே இருக்க சம்மதித்தாள். முடிந்தவரை அடிக்கடி வருவதாக அவளுக்கு உறுதி கொடுத்துவிட்டு ஒருவாறாக ஊருக்கு கிளம்பிச் சென்றான் ஜோவி.சுமியும் ஜாஸூம் எந்த நேரமும் சிரித்து விளையாடி எம்பிராய்டரி செய்வதிலும் குஷியாக பொழுதை களித்தனர்.பெரியவர்கள் இருவரும் லானில், ஹேமா பயங்கர நிறைவாக இருந்தாள். "எப்பிடி தான் உன் மக இங்க இருக்க ஒத்துகிட்டாளோ போ" என்று சிரித்தார் முத்துகுமரன் தங்கையிடம்."ம்.." என்று வாயெடுத்தவள் சக்தி வருவதை பார்த்து "ஹாய் சக்தி வா.." என்றாள்."ஹாய் அத்த..என்ன அண்ணனும் தங்கச்சியும் லானிலே..ஜாஸ் இங்க இருக்கிறதிலே நீ ரொம்ப குஷியா இருக்கே போல" என்றான் அத்தையிடம்."ம்..எல்லாம் சுமியால தான்..தப்பும் தவறுமா இந்தி பேசி..ஒரு மாதிரி ஜோவியை கரைச்சிட்டா தெரியுமா" என்றாள் அண்ணனை பார்த்து."யாரு நம்ம சுமியா? அவளுக்கு இந்தி தெரியுமா என்ன?" என்றார் அண்ணன்."கால் டாக்ஸி ஓட்டியிருக்கா இல்லியாண்ணே..கொஞ்சம் தெரியும் போல..ம்ச்.. எனக்கு அண்ணியே எனக்காக பேசின மாதிரி இருந்துச்சு அண்ணே" என்று நெகிழ்ந்தாள் தங்கை."ம்ச்.. எங்கிட்ட சொல்லிருந்தா நான் பேசிருப்பேனேம்மா" என்றார் அண்ணன் அக்கறையாக."ம்..அதான் அண்ணே..லேடீஸா இருந்தா இந்த மாதிரி விஷயம் எல்லாம் சொல்லாமலே புரிஞ்சிக்குவாங்க..ம்ச்.." என்று சிரித்தவள் "நல்ல பொண்ணு அண்ணே சுமி.." என்றாள்.சக்திக்கு எப்பிடி இதை எடுத்து கொள்வது என தெரியாமல் எழ போனவனிடம் அவன் அப்பா "சக்தி..இத எப்பிடி பேசுறதுன்னு தெரியலை..நீ..நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்க தானே..ஒண்ணும் பிரச்சனை எல்லாம் இல்லியே?" என்றார் தயங்கியபடி.அத்தையை ஒரு பார்வை பார்த்தவன் "ம்..ஆல் குட்பா " என்று தோளை குலுக்கியபடி வீட்டிற்குள் சென்றான் சக்தி.மகன் செல்வதையே பார்த்து பெருமூச்சு விட்டார் அப்பா. "அண்ணே ஃபீல் பண்ணாதே..அவன் சரியாகிடுவான்..நீ வேணா பாரு" என்று அண்ணனை ஆறுதல் படுத்தினாள் தங்கை.சுமி எந்த நேரமும் எம்பிராய்ரியும் கையுமாக இருந்தாலும் வாரத்தில் இரு நாட்களேனும் தன் வசப்படுத்தி வைத்திருந்தான் சக்தி. சக்தி நக்கல் அடித்த மாதிரி கட்டாயமாக கட்டுக்குள் சுமித்ராவை கொண்டுவந்தாலும் அதன் பின் அவள் அவனிடம் கரைவது மட்டும் நின்ற பாடில்லை..ஏனோ அந்த நேரங்களில் அவளால் அவனை எதிர்க்க முடியாமலே போனது. மற்ற நேரங்கிளில் வழக்கம் போல் சண்டை, நக்கல் என இருவரும் விரைப்பாகவே திரிந்தனர்.அன்று மகளை செக்கப்பிற்கு வரச் சொன்னாள் ஹேமா. சுமி தானே அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிட்டல் போய் சேர்ந்தாள்.இருவரும் ஸ்கேன் செக்கப் முடிந்து வெளியே வரும் நேரம் சுமிக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.அருகில் இருந்த ஜாஸ் "ஹே..சுமி யூ ஆல்ரைட்?" என்றாள்."ம்..ஓகே தீதி" என்று கண்ணை இறுக்க மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சுமி."நர்ஸ்" என்று அருகில் இருந்தவளை கூப்பிட்டு அம்மாவிடம் விவரம் கூறச் சொன்னாள்.அடுத்த பத்தாவது நிமிடம் ஹேமா அங்கிருந்தாள். கூட்டிச் சென்று டெஸ்ட்கள் எடுத்ததில் சுமித்ராவின் கர்ப்பம் உறுதியானது.ஹேமாவிற்கு சந்தோஷம் கொள்ளவில்லை அண்ணனுக்கு போன் செய்து விவரம் சொன்னாள்.சக்திக்கு போன் செய்யும் முன், சுமி அவளை தடுத்து "ம்ச்.. வேண்டாம்மா..நான் போறேன்.." என்றாள் மொட்டையாக."எங்க வீட்டுக்கா..அதெல்லாம் வேண்டாம் இரு நான் சக்திகிட்ட சொல்லி மூர்த்தியை வர சொல்லுறேன் ரெண்டு பேரும் வீட்ல போய் இறங்கிக்கோங்க" என்றாள் ஹேமா."இல்லம்மா..நான் மூர்த்தி அப்பா வீட்டுக்கு போறேன்.நான் வீட்டுக்கு இனி வரலை" என்றாள் தீர்க்கமாக."சுமி என்ன பேசுறே? ம்ச்.. கண்டதையும் யோசிக்காதே..சரி ஓகே நீ சும்மா கொஞ்ச நாள் அங்க இரு..வேற எதையும் பேசாதே..புரியுதா..இரு ஆட்டோ பிடிக்க சொல்லுறேன்" என்றபடி அவளை அனுப்பிவிட்டு சக்திக்கு தகவல் சொன்னாள். சக்திக்கு அவனையும் அறியாமல் ஒரு மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தது. ஹேமா அவனிடம் "மூர்த்தி வீட்டுக்கு தான் போயிருக்கா, முடிஞ்சா அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா சக்தி" என்றாள்."ம்..சரி அத்தே" என்று போனை வைத்தவன் வேலை முடித்து காரில் ஏறும் போது மூர்த்தியிடம் "உங்க வீட்டுக்கு போங்கண்ணே, மித்தூ அங்க தான் இருக்கா" என்றான்."அப்பிடியா சார்..இந்த செவ்வந்தி சொல்லவே இல்லையே" என்றபடி தன் வீடு வந்து சேர்ந்தார்.சுமித்ராவும் செவ்வந்தியும் ஆர்வமாய் உள்ளிருந்து மூர்த்தியை எதிர்பார்த்து திரும்பவும் அங்கு முதலில் நின்றது சக்தி.செவ்வந்தி முகம் மலர்ந்தாள்.சுமித்ரா முகம் சுருங்கியது. படக்கென எழுந்து அவனை வாசலோடு நிறுத்தினாள்."கிளம்பு வீட்டுக்கு போகலாம்" என்றான் சக்தி."எதுக்கு..இனி நான் உங்களுக்கு யூஸ் ஆக மாட்டேன்..அதனால நீங்க போங்க நான் வரலை" என்றாள் சுல்லென்று.சக்திக்கு வாசலோடு நிறுத்தி சுமித்ரா பேசியதில் கோபம் ஏறியது "அப்பிடின்னா??" என்றான் சுர்ரென்று."உங்க அத்த சொல்லிருப்பாங்ளே..உங்களுக்கு இனி நான் தேவைப்பட மாட்டேன்..எனக்கும் உங்க இனிஷியல் கூட" என்று அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.சக்திக்கு கோபம் உச்சிக்கு ஏறி, "அண்ணே நான் கிளம்புறேன்" என்று விறுவிறுவென கிளப்பினான் சக்தி.மூர்த்திக்கு அங்கு நடப்பது ஒண்றும் புரியவில்லை.சக்தி வீடு வந்து சேர்ந்த போது முகம் சிவந்து போயிருந்தது. ஹேமா அவனிடம் ஏதோ கேட்க வருவதற்குள் தட தடவென அவன் அறைக்குள் புகுந்தவன் சற்று நேரத்திற்கு எல்லாம் அறையில் சில சாமான்கள் உடையும் சத்தம் கேட்டது. ஹேமா பதறியபடி அவன் அறைக்கு போகவும் "இனிமே அவ இந்த வீட்குள்ள வந்தா அவ்வளவு தான் சொல்லிட்டேன்..ராஸ்கல் என்ன திமிரு..என் இனிஷியல்.." என்று மூச்சு வாங்கினான்.ஹேமா ஒருவாராக யூகித்து கொண்டாள்."சரி ஓகே கூல்..அவளை பத்தி பேசாதே..கெட் யூவர் செல்ப் ரிலாக்ஸ் சக்தி" என்று விட்டு சுந்தரியை கூப்பிட்டபடி இறங்கிச் சென்றாள்.மூர்த்தி வீட்டில் "நீ பேசினது தப்பு சுமித்ரா" என்றாள் செவ்வந்தி.அவள் பதில் பேச வாயை திறக்கும் முன் வாசலில் கார் வந்து நின்றது. வந்தது முத்துகுமரன். ஸ்வீட் பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு "சுமித்ரா ரொம்ப சந்தோஷம்மா" என்று வாசலில் வாய் கொள்ளாமல் வந்தார்.சுமி அவரை சமாளித்து சற்று நேரம் பேசிவிட்டு கொஞ்ச நாளில் வீட்டிற்கு வருவதாக அவரை அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்தாள்."அவருகிட்ட சொல்லுறது தானே ..சக்தி சார்கிட்ட பேசினதை எல்லாம்..என்னத்துக்கு மறைக்கணும்" என்றாள் செவ்வந்தி நேராக,"அவருக்கு எதுவும் தெரியாது" என்றாள் சுமித்ரா."மொத்தமா தெரிஞ்சா அவரு செத்தே போயிருவாரு" என்றவள் தானே தொடர்ந்தாள். "சரி உனக்கு பெரிசா இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்ல தான் அப்புறம் எதுக்கு அவருக்கு இடம் கொடுத்தே. எட்டியே வச்சிருக்க வேண்டியது தானே இந்த நிலைமை வந்திருக்காதுல்லே" என்றாள் உரப்பாக."நான் இடம் கொடுக்கல" என்றாள் சுமித்ரா மொட்டையாக."தப்பு சுமித்ரா..இப்பிடி பேசாதே..இதே உங்கம்மா இருந்திருந்த உன்னை செவிலுலேயே ஒன்னு விட்டுருப்பாங்க, நாங்க உன்ன பெக்கல அதுக்காக நீ அடம்பிடிச்ச தனமா வந்து நிக்கிறதுக்கு நாங்க ஓத்து ஊத முடியாது" என்றாள் கட் அன் ரைட்டாக."ம்ச்..செவ்வந்தி விடு..அது ரெண்டு நாள் இருக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம்.." என்று அமர்த்தினார் மூர்த்தி."நீங்க சும்மா இருங்க இது எல்லாம் பொம்பளைங்க விஷயம்..சிலதை உடனேயே சரிபடுத்திடணும்.இங்க பாரு சுமித்ரா..உனக்கு அத்தனையும் பெத்தவங்களா இருந்து நான் செய்வோம்..அதுக்காக இனிஷியல் இல்லாமே..அது அவருக்கு அசிங்கம் இல்ல உனக்கு தான்..அப்ப இந்த குழந்தை அசிங்கமா சொல்லு..நான் சித்ராகிட்ட பேசுறேன் அது சொல்லட்டும் நீ பேசுனது சரியான்னு" என்றாள் போனை எடுத்தபடி."ம்ச்.. வேண்டாம்மா..நான் அங்க போறேன் ..அப்புறமா..நாளைக்கு நீங்க அக்காகிட்ட சொல்லுங்க..நா இங்க ரெண்டு நாள் இருக்கேன்மா" என்றாள் சுமித்ரா.செவ்வந்தி ஆசுவாசமாகி, "உன் விரட்டுறதுக்காக சொல்லலை சுமித்ரா..நீ தனியாவே இருந்திருந்தா கூட நான் கூட்டிட்டு வந்து வச்சுகிட்டு இருந்து இருப்பேன், உங்கக்கா பிடிவாதமா உன்ன அவருக்கு கட்டிக் கொடுக்கணும்னு..ம்ச்..எங்களால அதுக்கு மீறி எதுவும் செய்ய முடியாமே தான்..ஆனா நாங்க தான் உன்ன தாரை வார்த்தோம்..இனி நான் விட மாட்டேன். எதுன்னாலும் சொல்லு நான் பேசுறேன் பெரிய சார்கிட்ட கூட பேசலாம்..நீ பயப்படாதே சுமித்ரா..நானும் அப்பாவும் உனக்கு இருக்கோம்" என்றாள் ஆறுதலாக.சுமித்ரா சிரித்து கொண்டு "ம்..சரிம்மா" என்றாள்."சந்தோஷமா இரு..சரி இரு வர்றேன்" என்றபடி சுமித்ராவிற்கு சாப்பிட கொண்டு வரப் போனாள் செவ்வந்தி.
YOU ARE READING
காவலே காதலாய்...
General Fictionபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...