அத்தியாயம் 7

7.6K 303 37
                                    

ஒரு மாதம் போயிருக்கும், சுமித்ராவிற்கு அந்த போலீஸ் குவார்டர்ஸ் பழகி போயிருந்தது. சப் இன்ஸ்பெக்டர் கங்காவும் அங்கேயே இருந்தாள். சுமித்ரா , மேடம் என மரியாதையாக பேச ஆரம்பிக்கவும்,"இது தான் நாங்க இருக்க இடம், இங்கே போய் மேடம் எதுக்கு?, அக்கானே கூப்பிடு" என்றாள் கங்கா.

கங்காவின் குழந்தை சுமித்ராவுடன் ,மூர்த்தி வீட்டில் இருக்க ஆரம்பித்தது.சுமித்ராவை அப்பப்போ வந்து ஹேமா பார்த்துவிட்டு போனாள்.மூர்த்தியையும் செவ்வந்தியையும் அப்பா அம்மா என்றே அழைத்து பழகினாள்.

அன்று ஹேமா வந்திருந்தாள், "என்ன சுமி எப்பிடியிருக்கே?" என்றாள் உற்சாகமாக.

"நல்லா இருக்கேன் மேடம் , நீங்க எப்பிடி இருக்கீங்க?" என்றாள் பதிலுக்கு மெலிதாய் சிரித்தபடி,

"ம்..உன்னோட சர்டிஃபிக்கேட்ஸ்க்கு எல்லாம் டூப்ளீகேட் அப்ளை பண்ணியாச்சு இல்ல, வந்ததும் சொல்லு

நம்ம ஹாஸ்பிட்டல் இல்லாட்டி உனக்கு வேற எங்கயாவது நான் வேலை அரேஞ்ச் பண்ணுறேன் சரியா?" என்றாள்.

"ம்..ஓகே தேங்க்ஸ் மேடம்" என்றாள் சுமி.

"மூர்த்தி கேஸ் எந்த லெவல்ல இருக்கு உங்களுக்கு எதாச்சும் தெரியுமா?" என்றாள் ஹேமா மூர்த்தியிடம்.

"ஒண்ணும் தெரியலைம்மா, சக்தி சார் எதுவும் சொல்லலையா?" என்றுவிட்டு நாக்கைக் கடித்தார்.

சுமித்ரா ஒரு மாதிரியாக பார்க்கவும், ஹேமா "சக்தி என் அண்ணன் பையன், நாங்க எல்லோரும் ஓண்ணா தான் இருக்கோம், அவன் சொல்லி தான் எனக்கு உன்னை பத்தித் தெரியும்" என்றவள் சுமித்ரா என்ன சொல்லுவாள் என எதிர்பார்த்தாள்.

"ஓ,உங்க அண்ணன் பையன் செஞ்ச பாவத்தை சரிகட்ட தான் எனக்கு இந்த ஏற்பாடா?" என்றாள் சுமி.

"ம்..நாட் அட் ஆல் சுமி..எனக்கும் வலியிருக்கு..நானும் என் புருஷனை போர்ல பறி கொடுத்தவ தான்..நம்ம உறவு ஒண்னை இழந்தாலே எப்பிடி வலிக்கும்னு எனக்குத் தெரியும்..நீ மொத்த குடும்பத்தையும் தொலைச்சிருக்கே..நீ சின்ன பொண்ணு வேற..இப்பிடி பட்ட விக்டிம்ஸ் ஹெல்ப் பண்ணுறது என் வேலை இல்ல..ஆனா இப்ப உனக்கு அப்புறம் இதை ஏன் வேலையாவே செய்ய கூடாதுன்னு தோணுது.நான் அது சம்மந்தமா இன்னும் கீளீனா ப்ளான் பண்ணலை..உனக்கு சக்தியை புடிக்கலைனு நான் புரிஞ்சுகிட்டேன் அதான் இவ்வளவு நாளா சொல்லலை..ஸாரி சுமி" என்றாள் தணிவாக ஹேமா.

காவலே காதலாய்...Where stories live. Discover now