அத்தியாயம் 6

7.8K 285 21
                                    

மறுநாள் காலை டயனிங்கில் பிடித்தாள் அண்ணன் மகனை ஹேமா.

"சக்தி , அந்த பொண்ணோட அக்கா என்ன சொல்லுறா?" என்றாள் நேரடியாக.

"ம்ச்..அத்த" என்றபடி அவளை பார்த்தான்.

அங்கே வந்த அண்ணன் உள்ளே புகுந்து "அதானே நானே கேட்கணும் நினைச்சேன், ஏன் ஹேமா? அந்த பொண்ணு என்ன ஸ்பெஷல்? ஏன் இவ்வளவு மெனகெடுறே?" என்றார்.

"இல்லண்ணா என்னவோ வலிக்குது, வார்ல சண்ட போட வர்றவங்க செத்து போவாங்க, அத நேரா அவங்க குடும்பம் பார்த்தா எப்பிடி யிருக்கும்னு யோசிச்சு பாரு..உயிர் நின்னு போயிருண்ணா..ம்ச்..பாவம் அந்த பொண்ணு பெத்தவங்களை கண்ணுக்கு முன்னாடி தொலைச்சிட்டு, காரியம் பண்ண நாலு நாள் காத்திருந்து..ப்பா..எனக்கு அப்பிடியே உலுக்குது..அந்த பொண்ணுக்கு எதாவது செய்யணும் அவளை பழைய மாதிரி ஒரு சாரசரி வாழ்க்கைக்கு திருப்பணும் தோணுச்சு..அதான்" என்றாள் ஹேமா.

"ம்ச்..என்ன அத்த சிட்டியிலே இது மாதிரி எவ்வளவோ நடக்குது, இந்த கேஸ் நா டீல் பண்ணுறதுனால நான் சொன்னேன், இல்லாட்டி என்ன பண்ணிருப்பே?" என்றான் அண்ணன் மகன்.

"தெரியல, ஆனா எனக்கு தான் இப்ப இது தெரிஞ்சிருச்சே..சரி நீ சொல்லு அந்த பொண்ணோட அக்கா பேமிலி என்ன சொல்லுறாங்க?" என்றாள் ஹேமா விடாமல்.

"என்ன ஹேமா, அடுத்து அபலைகள் காப்பகம் ஆரம்பிக்க போறியா?" என்றார் அண்ணன் கிண்டலாக.

"ம்ம்..நாட் எக்ஸாக்ட்லி..ஆனா இந்த மாதிரி விக்டிம்ஸ் இனி ஹெல்ப் பண்ணினா என்னனு தோணுது" என்றாள் ஹேமா யோசனையாக.

சற்று நேரத்தில் சுதாரித்து கொண்டு "பதிலே சொல்லாமே இருந்தா என்ன சக்தி அர்த்தம்?" என்றாள் விடாமல்.

"ம்ஹூம்..அவங்க அந்த பொண்ணை பழனி கூட்டிட்டு போகணும் கேட்டாங்க, கேஸ்ல இருக்கும் போது நான் அலோவ் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன்..தே டோண்ட் ஹேவ் எனி ஒன் ஹியர்..ஸோ எனக்கு தெரியலை" என்று தோளை குலுக்கிவிட்டு எழுந்தான் சக்தி.

காவலே காதலாய்...Tahanan ng mga kuwento. Tumuklas ngayon