அத்தியாயம் 4

7.7K 271 32
                                    

அடுத்த ரெண்டாம் நாள் ஜி ஹெச்சில், திடுக்கிட்டு எழுந்தாள் சுமித்ரா.சுற்றும் பார்த்தவள்,நிலைமை உணர்ந்தவளாய் சட்டென படுக்கையை விட்டு எழுந்தவள் அப்போது தான் தனக்கு போட்டிருக்கு டிரிப்ஸை கவனித்தாள். ரெண்டு பெட் தள்ளி இருந்த நர்ஸ், "இந்தாம்மா, கொஞ்சம் இரு, இதோ வர்றேன்" என்றபடி வெளியே சென்று காவலுக்கு நின்ற போலீஸிடம் "சார் அந்த பொண்ணு முழிச்சிருச்சு, நான் டாக்டரை கூட்டிட்டு வந்திடுறேன்" என்றபடி அங்கிருந்து சென்றாள்.

வெளியே நின்ற போலீஸ்கார்ர்,வெளியில் நின்ற பெண் சப் இன்ஸ்பெக்டரை போனில் அழைத்து விவரம் சொல்ல அவளும் உள்ளே வந்தாள்.

அதற்குள் சுமித்ரா, டிரிப்ஸை எடுக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.

"நீ சுமித்ரா தானே?" பெண் போலீஸ் அதிகாரி கங்கா.

"ம்..எங்க அம்மா, அப்பா, செந்தில் தம்பி..எங்க? என்னாச்சு? ஓண்ணுமில்லைல? அவங்கள எங்க அட்மிட் பண்ணீருக்கீங்க?" என்றாள் பதட்டமும் பயமுமாக.

"ம்ஹூம்..சொல்லுறேன்.."என்றவள் டாக்டர் வரவும் சற்று தள்ளி நின்று கொண்டாள்.

"டாக்டர்..எங்கப்பா அம்மா எங்க இருக்காங்க? ம்..எங்க அப்பா பேரு காத்தமுத்து..ஆக்ஸிடெண்ட்..இல்ல வீடு வெடிசிருச்சு..எங்க இருக்காங்க? ப்ளீஸ்..என்னை விடுங்க.." என்றவள் டிரிப்ஸை காட்டி "இத எடுங்க ,நான் அவங்களை பார்க்கணும்" என்றாள் சுமி தவிப்பு மாறாமல் டாக்டரிடம்.

டாக்டர் எஸ்.ஐ. கங்காவை பார்த்து தலையசைக்கவும், "ம்ஹூம்.. ஓகே டாக்டர்.." என்றவள் சுமித்ராவிடம் திரும்பி "ம்..அவங்க இல்ல சுமித்ரா" என்றாள்.

"யாரு?" என்றாள் அதிர்ச்சி மாறாமல் சுமி.

"உன் பேரண்டஸ் அப்புறம் அந்த சின்ன பையன்..உன் தம்பியா?" என்றாள் கவனமாய் உணர்ச்சியை துடைத்துவிட்டு கங்கா.

சுமித்ராவிற்கு நெஞ்சே நின்றுவிடும் போல இருந்தது "எ.என..எனக்கு புரியலை? இல்லனா.."

"ம்ஹூம்..உங்க வீட்டுல நடந்த ப்ளாஸ்ட்ல யாரும் பிழைக்கல..ம்..எல்லாரும்..இறந்துட்டாங்க" அமைதியாக கங்கா.

காவலே காதலாய்...Where stories live. Discover now