அத்தியாயம் 24

13.3K 332 32
                                    

"பூம்" என்று காதில் வந்து கத்தினாள் சுமி.

"ம்..ம்" என்றபடி நெட்டிமுறித்து கண்ணை திறந்தான் சக்தி.

சுமித்ரா அழகாக சேலை கட்டி வெளியே கிளம்ப ரெடியாக இருந்தாள்.

"ஹேய்..என்ன எங்க கிளம்பிட்டே?" என்றான் சக்தி கண்ணை தேய்த்து கொண்டு கொட்டாவி விட்டு கொண்டே.

"நீ தானே எங்கக்கா வீட்டுக்கு போக சொன்னே அதான் கிளம்பிட்டேன்" என்றாள் அபிநயம் பிடித்து கொண்டு.

"என்ன?" என்று அதிர்ச்சியாக எழுந்து உட்கார்ந்தான்.

"ஹாஹ்ஹா" என்றஎழுந்த வேகத்தை பார்த்து சிரித்த சுமி.."சரி சரி ரொம்ப ஜெர்க்காதீங்க போலீஸ்கார் நான் சும்மா தான் சொன்னேன்" என்றாள் மறுபடியும் சிரித்து கொண்டே..

பொய்யாய் முறைத்தவன், "சரி கிளம்பு, நாம வெளியே போகலாம்..ம்..மணி என்னனன?" என்றவன் செல்போனை பார்த்துவிட்டு ஓகே இன்னும் 7 ஆகல..ம் சரி நான் குளிச்சிட்டு வர்றேன்..நீ.." என்றவன் கப்போர்ட்டில் இருந்து ஒரு பையை எடுத்து அவளிடம் கொடித்து "இத போடு" என்றான்.

"அய்யோ இது என்ன புது கூத்து? கடமை என்னாவது போலீஸ்கார்" என்றாள் கண்ணை உருட்டிக் கொண்டு கலாட்டாவாக.

"அதான் ஆத்துறதுக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டியே..அப்புறம் என்ன? அதெல்லாம் நான் நாளைக்கு பார்த்துக்கிறேன்...நீ கிளம்பு" என்றுவிட்டு பாத்ரூமிற்குள் சென்று புகுந்து கொண்டான்.

சுமித்ரா அந்த கவரை திறந்தாள், அதில் மெட்டர்னிட்டி கவுன் இருந்தது. மிக அழகாக நேர்த்தியாக இருந்த்து, அதை அணிந்து கொண்டாள்.

பாத்ருமை விட்டு வெளியே வந்தவன் அவளை பார்த்து கொல்லென சிரித்துவிட்டு இது என்ன கோலம் என்றான்.

மெட்டர்னிட்டி கவுனில், பின்னலிட்ட தலை, கை நிறைய கண்ணாடி வளையல்கள்,காலில் கொலுசு சகிதம் "ம்ச்.. ஏன் சிரிக்கிறே?" என்று சிணுங்கினாள் சுமி.

"பின்ன என்ன மித்தூ நீ, இப்பிடியா இந்த ட்ரஸிற்கு இருப்பாங்க..இரு ஒரு நிமிஷம்" என்றவன் அவன் கப்போர்டில் இருந்து ரெண்டு வளையல்களை கொடுத்து "அதை எல்லாம் கழட்டிடு இதை போட்டுக்கோ" என்றான்.

காவலே காதலாய்...Where stories live. Discover now