நறுமுகை pov:"எனக்கு இதுல சம்மதம் இல்லை...."னு சொன்னேன்
எல்லாரும் என்னைய திரும்பி பார்த்தாங்க...
"உன் சம்மதத்தை யாரு டி கேட்டா....எவன்கூடியோ ஊரு சுத்திட்டு வந்துட்டு பேச்ச பாத்தியா இவளுக்கு......பெரியப்பா பையன் பொன்னு வாழ்க்கை வீனாப் போகக்கூடாதுன்னு ஏதோ எங்க பெரியம்மா கேட்டுச்சேன்னு என் பையன உனக்கு கட்டிவைக்க ஒத்துக்கிட்டா பெருசா பேசுரா...இந்த ஊருல எவன் உன்னைய கல்யாணம் பன்னிப்பான்.....அதுனால வாய மூடிட்டு பெரியவங்க சொல்றத கேட்டு ஒழுங்கு மரியாதையா நடந்துக்கோ....."னு என் அத்தை சொல்லுச்சு...
எனக்கு அதை கேட்டு கோவம் வந்துடுச்சு....
"போனாபோகுதுன்னு உன் பையன எனக்கு கல்யாணம் பன்னிவைக்குறியா.....உன் பையனுக்கு இந்த ஊருல எவனும் பொன்னு குடுக்க மாட்றான்னு சொல்லு.....அதான இங்க வந்து உக்காந்துட்டு பதினஞ்சு வயசு பொன்னுக்கு இருபத்தஞ்சு வயசு தடிமாடுக்கு கல்யாணம் பன்னிக்குடுங்கன்னு கேக்குற.....அயோக்யதனத்தோட மொத்த உருவமா உன் புள்ளை இருக்குறான் அவனுக்கு என்னைய கேக்குதா..... உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்குதா...இல்லையா..."னு கத்துனேன்
எல்லாரும் நான் பேசுனத கேட்டு ரொம்ப கோவமா பார்த்தாங்க....நான் எதையும் கண்டுக்கவே இல்லை....
"என்னப்பா வடமலை உன் பொன்ன பேச விட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்குறியா....அவ எங்கள அசிங்க படுத்திட்டு இருக்குறா..என்னென்னு கேளு.....உன் பொன்னுன்றதால நான் அமைதியா இருக்குறேன்.....இல்லன்னா இங்க நடக்குறதே வேற....."னு மாமா சொன்னாரு
"என்ன பன்னுவிங்க....என்ன அடிப்பிங்களா....அடிங்க பாக்கலாம்....என் மேல இன்னைக்கு யாருயாருல்லாம் கை வைக்குறிங்களோ அவுங்க எல்லாரும் நாளைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலமை வரும்.....முடியாதுன்னு நினைக்குறிங்களா........"னு சொன்னேன்
"என்ன டி மெரட்டுறியா.....சவால் விடுறியா...."னு என் மாமா ஆறுமுகம் கேட்டான்
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...