முகி pov:
சாய்ங்காலம் காலேஜ் முடிஞ்சதும் ஸ்வாத்தி சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்....
வெளில கிருஷ்ணா எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தான்....நான் அவன பாத்துட்டு சிரிச்சிட்டே போனேன்...."யாரோ நல்ல மூட்ல இருக்காங்க போல...."னு கேட்டான்
"ஆமா....ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்...."னு சொன்னேன்
"காலையில உம்முனு இருந்த....ஆனா இப்போ சிரிச்சிட்டே வர....இந்த மாற்றம் எப்புடி நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா....."னு கேட்டேன்
"எல்லாம் ஸ்வாத்தியோட மேஜிக்....அவதான் என் மூட சரி பண்ணுனா...."னு சொன்னேன்
"எப்புடியோ ஒழுங்கா சிரிச்சு பேச ஆரம்பிச்சியே அதுவே போதும்....கிளம்பலாமா...."னு கேட்டான்
நானும் சரின்னு சொன்னேன்.....ரெண்டு பேரும் வீட்டுக்கு போனோம்.....
வீட்டுல பாட்டி தாத்தா மட்டும்தான் இருந்தாங்க....அம்மா அப்பா ரெண்டும் பேரும் இல்லை....நான் வீட்டுக்கு போனதும் பாட்டி தாத்தாக்கூட உக்கார்ந்து பேசிட்டு இருந்தேன்....
அப்போ நர்மதாவும் நவீனும் ஸ்கூல் முடிச்சிட்டு வந்தாங்க.....நர்மதா முகமே சோர்ந்து போய் இருந்துச்சு.....பாட்டி அதை கேட்கவும் செஞ்சுட்டாங்க...."நர்மதா ஏன் முகம் வாடிருக்குது.....என்னாச்சு மா...."னு கேட்டாங்க
"பாட்டி அவ நேத்துல இருந்தே அப்புடி தான் இருக்குறா.....என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறா....."னு சொன்னான்..
"அப்புடியா நர்மதா நவீன் சொல்றது உண்மையா...."னு பாட்டி கேட்டாங்க...
"அதெல்லாம் ஒன்னும் இல்லை பாட்டி....நான் நல்லாதான் இருக்குறேன்....எனக்கு கொஞ்சம் முடியல தலை வலிக்குது நான் ரூமுக்கு போரேன் பாட்டி....."னு சொல்லிட்டு போய்ட்டா
அவ சொன்னத பாட்டி வேணும்னா நம்பிருக்கலாம் ஆனா என்னால சுத்தமா நம்ப முடியல....எதோ இருக்குதுன்னு யோசிச்சிட்டே உக்காந்து இருந்தேன்....
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...