நிஷா pov:நான் ரிஷி என்ன நினைச்சாலும் பரவாயில்லன்னு என் மனசுல இருக்குறதை சொல்லிட்டேன்....என்னால அதுக்கப்புறமா அவன் முகத்தை பாக்க முடியல....அதுனால நான் அங்க இருந்து கிளம்பிட்டேன்....இனிமேல் நான் ரிஷிக்கிட்ட இருந்து விலகி இருக்கனும்னு முடிவு எடுத்தேன்.... அப்பத்தான் என்னால அவன என் மனசுல இருந்து எடுக்க முடியும்னு தோனுச்சு.....
ஆனா என்னால அவன மறக்க முடியல......என்னால எந்த வேலையிலையும் கவனமா இருக்க முடியல....
முகிக்கு ப்ரவீன் என்னைய கிஸ் பண்ண விஷ்யம் எல்லாம் தெரியாது.....அவளே கிரிஷ்ணாவ நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்குறான்னு எனக்கு தெரியும்....மேலும் இந்த பிரச்சனைய சொன்னா அவ ரொம்ப ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுவா அதுனாலதான் அவக்கிட்ட மறச்சிட்டேன்....
ஆனா ரிஷிக்கிட்ட சொல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுருச்சு....அதுவும் நல்லதுக்குதான்னு என் மனச தேத்திக்கிட்டேன்.....அப்புடியே ஒரு வாரம் ஓடிப் போச்சு லீவும் முடிஞ்சிருச்சுநான் இந்த வர்ஷம் ட்வெல்த்துன்றதால ஸ்பெஷல் க்ளாஸ் ஆரம்பிச்சுட்டாங்க ......நானும் முகியும் தான் ஸ்கூட்டில ஒன்னா ஸ்கூல்கு வந்துட்டு இருந்தோம்....எப்பவும் நானும் அவளும் ஸ்பெஷல் க்ளாஸ் முடிச்சிட்டு ட்யூஷன் போவோம்.....
ஒரு நாள் ட்யூஷன் முடிச்சிட்டு நானும் முகியும் வீட்டுக்கு போகலான்னு கிளம்புனோம்....அன்னைக்கு கொஞ்சம் வழக்கமா விடுற டைம விட நேரமாகிடுச்சு....அன்னைக்குன்னு பாத்து வழில ஸ்கூட்டி நின்னுடுச்சு....
"முகி என்னாச்சு ஏன் ஸ்கூட்டி நின்னுடுச்சு...."னு கேட்டேன்
"தெரியல டி ஒரு நிமிஷம் என்னன்னு பாக்குறேன் இரு...."னு சொல்லிட்டு ஸ்கூட்டிய ஸ்டார்ட் பண்ணி பாத்தா....ஸாடார்ட் ஆகல
"நிஷு என்னன்னு தெரியல ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது....அல்ரெடி நேரம் ஆகிடுச்சு....என்ன பண்ணுறதுன்னு தெரியல டி...."னு பதட்டமா சொன்னா...
"முகி ரிலாக்ஸ்....பக்கத்துல தான் ஃபோன் பூத் இருக்கு போய் ரெண்டு பேரும் வீட்டுக்கு மொதல்ல கால் பண்ணி விஷ்யத்தை சொல்லுவோம்....அதுக்கப்புறம் மத்ததை பத்தி யோசிப்போம்..."னு சொல்லிட்டு ரெண்டு பேரும் போய் வீட்டுக்கு ஃபோன் பண்ணுனோம்....எங்க வீட்டுல அப்பா அம்மா ரெண்டு பேருமே ஃபோன் எடுக்கல....அதுனால வீட்டு லேன்ட் லைன்க்கு ஃபோன் அடிச்சேன்....என் தம்பி ஃபோன் எடுத்தான்....
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...