ரிஷி pov:கிருஷ்ணா எனக்கு கால் பண்ணி அவசரமா என்னைய பாத்து எதோ பேசனும் அதுனால உடனே கிளம்பி வர சொல்லி காலையில என்கிட்ட சொன்னான்....
நானும் எதோ அர்ஜென்ட் போலன்னு அவன் சொன்ன இடத்துக்கு போனேன்.....
எப்பவும் லேட்டா வரவன் அங்க எனக்கு முன்னாடி வந்து வெய்ட் பண்ணிட்டு இருந்தான்....அப்புடி என்ன பேசப்போறான்னு யோசிச்சிட்டே நான் அவன் பக்கத்துல போனேன்....நான் அவன் பக்கத்துல போனதும் என் பக்கத்துல ஓடி வந்து என்னைய கட்டிப்புடிச்சிட்டு மச்சான்னு கத்துனான்...."டேய் டேய்....விடுறா....எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க டா....."னு சொன்னேன்
"டேய் மச்சான் முகி என்னைய லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா டா......"னு கத்துனான்
அவன் சொன்னது கேட்டு நான் அப்புடியே ஷாக் ஆகிட்டேன்...
"எப்புடி டா இந்த கொடுமை நடந்துச்சு....முகி வந்து சொன்னாளா...."னு கேட்டேன்...
"இல்லை....."
"அப்புறம் எப்புடி அவ லவ் பண்ணுறான்னு சொல்லுற...."
"டேய் அவ கண்ணுல என் மேல இருக்குற லவ் நல்லாவே தெரிஞ்சுது டா...."
"ஓஓஓ....நீ அப்புடி வர.....கண்டதும் காதல் மாதிரி....மச்சான் நீ எங்கையோ போய்ட்ட டா...."
"நக்கல் அடிச்ச பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு கூட பாக்க மாட்டேன்....கொலைப் பண்ணிடுவேன் டா....கடுப்ப கிளப்பிக்கிட்டு...."
"சரி சரி....சும்மா விளையாண்டேன் டா.....சரி என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு பாக்கலாம்"னு சொன்னேன்
அவனும் என்ன நடந்துச்சுன்னு சொன்னான்...எனக்கு அதைக்கேட்டுட்டு ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுது....கிரிஷ் முகிய ரொம்ப டீப்பா லவ் பண்ணுறான்னு தெரிஞ்சுக்கிட்டேன்.....
"சரி மச்சான்....அவ மனசுல நீ இருக்குறன்னு உறுதியாகிடுச்சுல....இன்னும் எவ்வளோ நாள் இப்புடி உன் மனசுல இருக்குறதை அவக்கிட்ட சொல்லாம மறச்சு வைக்க போர....
நீ லேட்டாக்காத டா....சொல்லிடு....அதுக்கப்புறம் முடிவெடுக்க வேண்டியது அவ கையிலதான் இருக்கு...."னு என் மனசுல பட்டதை சொன்னேன்
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...