நறுமணம் 43

3.9K 188 22
                                    


முகி pov:

     நாங்க காஃபி ஷாப்ல உக்கார்ந்து இருந்தப்போ அந்த ப்ரவீன் எங்கக்கிட்ட வந்தான்....நர்மதா அவன பாத்துட்டு பயப்பட ஆரம்பிச்சுட்டா....நவீன் கூட இருந்ததால எனக்கும் கொஞ்சம் பயமா இருந்துச்சு....ஏன்னா அவன் எல்லாத்தையும் ஒன்னு விடாம அப்புடியே வீட்டுல போய் சுதா மாக்கிட்ட சொல்லிடுவான்....என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.....ப்ரவீன் பாத்து கையக்காட்டி வராதன்னு நர்மதா சொன்னா....அவன் அதே இடத்துல நின்னுட்டு எங்களையே பாத்துட்டு இருந்தான்....நவீன இங்க இருந்து போக வைக்கனும் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டே இருந்தேன்.....

"நவீன் நீ போய் கார்ல உக்கார்ந்து இரு நானும் நர்மதாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுறோம் சரியா...."னு சொன்னேன்

"ஏன்...நானும் ஒங்கக்கூடவே வருறேன்...."னு சொன்னான்

"நவீன்....நான் சொன்னா கேட்பியா மாட்டியா.....முக்கியமான வேலை இருக்குது நீ போ நாங்க வந்துடுறோம்...."னு சொன்னேன்

அவனும் அதுக்கப்புறம் எதுவும் பேசாம போய்ட்டான்....
அவன் போனதுக்கு அப்புறம் ப்ரவீன் எங்க பக்கத்துல வந்தான்....

"உனக்கு எல்லாம் ஒரு தடவ சொன்னா புத்தி இருக்காதா....அதான் இனிமேல் அவள பாக்கவோ பேசவோ கூடாதுன்னு உன்கிட்ட தெளிவா சொல்லிட்டால அப்புறம் என்ன வேணும் உனக்கு...."னு நான் அவன திட்டுனேன்...

"முகி ப்ளீஸ் நான் நர்மதாக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.....நான் பிரச்சனை பண்ண வரல....அஞ்சு நிமிஷம் தான்....அதுக்கப்புறம் நான் போய்டுவேன்....ப்ளீஸ்...."னு சொன்னான்

நான் முடியாதுன்னு சொல்ல போனேன்...ஆனா நர்மதா என்னைய பேச விடாம அவ பேச ஆரம்பிச்சா...

"விடு முகி அஞ்சு நிமிஷம்தான பேசட்டும்....அப்புடி என்ன பெருசா பேசப்போறான்னு நானும் பாக்குறேன்....."

"நர்மதா புரியாம பேசாத....இவன பத்தி உனக்கு தெரியாது....இப்பக்கூட நம்ம இவன்கிட்ட பேசுறத யாரையாவது வச்சு ஃபோட்டோ எடுத்து வீட்டுல காமிச்சு மெரட்டுனாலும் மெரட்டுவான்....அப்புடி பண்ண ஆள் தான் இவன்....அதுனால நான் உன்னைய இவன்கூட தனியா விட மாட்டேன்...."னு சொன்னேன்

 நறுமுகை!! (முடிவுற்றது)Where stories live. Discover now