முகி pov:நானும் க்ரிஷும் சொன்ன மாதிரி சண்டே மத்தியானம் சிவா வீட்டுக்கு கிளம்பி போய்ட்டோம்....அண்டிக்கும் அங்கிள்கும் எங்கள பாத்துட்டு ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாங்க....
எல்லாரும் உக்காந்துட்டு பேசிட்டு இருந்தோம்....சிவா எங்கையுமே காணோம்....
"அண்டி சிவா எங்க...ஆளையே காணோம்...."
"இல்லமா முக்கியமான மீட்டிங் இருக்குதுன்னு கிளம்பி போயிருக்குறான்....வந்துரு வான்...."
"நான் வரேன்னு தெரியும்ல....ஏன் இப்புடி பண்ணுறான்....நேத்து ஃபோன் பண்ணுனேன் எடுக்கல....மிஸ்ட் கால் பாத்துட்டாவது கால் பண்ணுவான்னு நினைச்சேன் ஆனா பண்ணல.....அவன்மேல பயங்கர காண்டுல இருக்குறேன்...."னு சொல்லிட்டு இருக்கும்போதே சிவா உள்ள வந்தான்....
ஆளே மாறிட்டான்....மூனு மாசம் தான் பாக்காம இருந்தேன் அதுக்குள்ள இப்புடி மாறிட்டான்....என்னாச்சு இவனுக்குன்னு நான் யோசிச்சிட்டே உக்காந்துட்டு இருந்தேன்.....
எங்கள பாத்துட்டு லைட்டா சிரிச்சிட்டு வந்தான்....
"ஸாரி ப்ரோ கல்யாணத்துக்கு வர முடியல....எனிவேஸ் கங்ரேட்ஸ்...."னு சொன்னான்
"தேங்க்ஸ் ப்ரோ...."னு சொல்லிட்டு க்ரிஷும் அவனும் ஹக் பண்ணிக்கிட்டாங்க...
என்கிட்ட வந்தான் நான் கண்டுக்காத மாதிரி இருந்தேன்....
"மா மேடம் என்கிட்ட பேச மாட்டாங்களோ...."
"அண்டி பேசாம இருக்குறது யாருன்னு ஃபோன் எடுத்து பாத்துட்டு அதுக்கப்புறம் குத்தம் சொல்ல சொல்லுங்க...."
"ஓ அந்த கோபத்துல இருக்குறிங்களா....சரி ஸாரி நான் முக்கியமான மீட்டிங்ல இருந்தேன்....வீட்டுக்கு வந்துட்டு கால் பண்ணலாம்னு நினைச்சேன் மறந்துட்டேன்...."
"ஆமா ஆமா என்னைய எல்லாம் எங்க உனக்கு ஞாபகம் இருக்கும்....நீதான் பெரிய பிஸ்னஸ் மேன் ஆகிட்டியே....கொம்பு மொழச்சிடுச்சு...."
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...