முகி pov:கிரிஷ் ரேஷ்மா கிட்ட அப்புடி பேசுனதுக்கு அப்புறம் அவ என்கிட்டையோ இல்ல கிரிஷ்கிட்டையோ அவ்வளவா வம்பு பண்ணுறது இல்ல....அவ அமைதியா இருக்குறத பாத்துட்டு என்னால நல்லதுக்குதான்னு எடுத்துக்க முடியல.... எதாவது ப்ளேன் பண்ணுறாளோன்னு எனக்கு தோனிட்டே இருந்துச்சு.....
நான் உக்காந்துட்டு யோசிச்சிட்டே இருந்தேன்....நிஷுக்கிட்ட இருந்து கால் வந்துச்சு....
"ஹலோ நிஷு என்ன இந்த நேரத்துல கால் பண்ணியிருக்குற....."னு கேட்டேன்...
"ம்ம்....அதுவா சொல்லுறேன்.....ஃபர்ஸ்ட் நீ உன் வீட்டுக்கு வெளியில போய் பாரு....."
"ஏன் என் வீட்டுக்கு வெளில என்ன இருக்கு...."
"ஏய் கேள்வி கேட்காம போ...."னு சொன்னா
நானும் அவ சொன்ன மாதிரியே வெளியில போய் பாத்தேன்....அங்க நிஷு ஃபோன் வச்சிட்டு சிரிச்சிட்டே என்னைய பாத்து ஹாய்னு கை காமிச்சா....என்னால நம்பவே முடியல....என் கண் முன்னாடி நிஷு.....கணவு மாதிரி இருந்துச்சு....
நான் சிரிச்சிட்டே ஓடிப்போய் அவள ஹக் பண்ணிக்கிட்டேன்....
"ஏய் லூசு நாளைக்குதான என்கிட்ட வரேன்னு சொன்ன....இன்னைக்கே வந்துட்ட அதுவும் நைட்டு...."னு கேட்டேன்
"அதுவா என்னன்னு தெரியல ரிஷி கொஞ்சம் சோகமா பேசுற மாதிரி இருந்துச்சு என்னால அங்க பொறுமையா இருக்க முடியல....அதான் இன்னைக்கு காலேஜ் லீவ் போட்டுட்டு மத்தியமே கிளம்பிட்டேன்.....வீட்டுல சொன்னேன் எல்லாரும் வெளில போயிருக்குறதா சொன்னாங்க....அதான் சென்னை வந்ததும் ஸ்ட்ரெய்டா உன்னைய பாக்க வந்துட்டேன்....இன்னைக்கு நைட்டு இங்கதான்...."னு சொன்னா....
"அதுக்கென்ன தாராளமா இரு....சுதா மா கூட நீ எப்ப வருவ உன்னைய பாத்து ரொம்ப நாளாச்சுன்னு சொல்லிட்டே இருந்தாங்க.....
சரி சரி...வா உள்ள போகலாம்...."னு சொல்லிட்டு அவள உள்ள கூட்டிட்டு போனேன்....
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...