கிருஷ்ணா pov:முகி அன்னைக்கு தேவையில்லாம ரியாக்ட் பண்ணுனான்னு எனக்கு தோனுச்சு....ரிஷி நிஷு அவுங்க லவ் பண்ணுற விஷயத்தை சொல்லுறதும் சொல்லாம போறதும் அவுங்க தனிப்பட்ட விஷயம்....அதை இவை ஏன் சொல்லவே இல்லைன்னு கேட்குறது தப்பு.....
இதுவரைக்கும் முகி எதையுமே எங்கக்கிட்ட மறச்சது இல்லதான்...ஆனா நாங்க யாருமே அவள எல்லா விஷயத்தையும் சொல்ல சொல்லி கட்டாய படுத்தலையே....அவளா எல்லாத்தையும் சொல்லுவா நாங்க கேட்டுப்போம் அவ்வளவுதான்.....ஆனா அதை பொறுமையா அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வச்சிருக்கலாம் அவசரப்பட்டு கத்திட்டேன்.....தேவையில்லாம நானும் வார்த்தைய விட்டுட்டேன்.....
அன்னைக்கு முகிக்கிட்ட அப்புடி பேசுனதுக்கு அப்புறமா அவ என்கூட ரிஷிக்கூட நிஷுக்கூட அவ்வளவா பேசுறதை நிறுத்திக்கிட்டா.....அதுக்குன்னு சுத்தமா எங்கக்கூட பேசாம இல்லை....ஆனா கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு அமைதியாகிடுவா.....எங்கக்கூட இருக்குற நேரத்தை கம்மி பண்ணிக்கிட்டா.....
வெளில எங்கையாவது போகலாம்னு நான் கூப்டாலும் படிக்கணும்னு சொல்லிட்டு போய்டுவா....நான்தான் அவக்கிட்ட கடுமையா பேசுனேன் ஆனா அவ ஏன் ரிஷி அப்புறம் நிஷுக்கிட்ட சரியா பேசமாட்டேங்குறான்னு எனக்கு புரியல....நிஷுவும் அவளும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்....இப்ப அவக்கிட்ட ஒரு டிஸ்டென்ஸ் வச்சுத்தான் அவ பழகுறா.....ரிஷிய அண்ணான்னு கூப்டுறதை நிறுத்திட்டா....அவன் அதை சொல்லி சொல்லி என்கிட்ட ஃபீல் பண்ணுறான்.....என்னைய பேர் சொல்லி கூட கூப்டறது இல்லை.... எல்லாத்துக்கும் நான் காரணம் ஆகிட்டேனோன்னு எனக்குள்ளையே உறுத்திட்டு இருக்குது.....
நான் பேசுன வார்த்தை இந்த அளவுக்கு அவள பாதிக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல....
அவ இப்புடி இருக்குறது என்னைய விட்டு அவ ரொம்ப தூரம் விலகி போற மாதிரி இருந்துச்சு......
இப்ப எல்லாம் என்னைய அவ கண்டுக்கருது இல்லை....என் ரூம்க்கு வந்து டெய்லி பேசுவா....ஆனா இப்ப எல்லாம் அவ ரூம விட்டே வெளில வரமாட்டேங்குறா.....அம்மா போய் அவள வழுக்கட்டாயமா இழுத்துட்டு வந்து கொஞ்ச நேரம் வெளில வந்து உக்கார வைப்பாங்க.....
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...