நறுமணம் 80

4.7K 195 53
                                    


Mughi pov:

    கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது....அன்னைக்கு சாய்ங்காலமே ரிசெப்ஷன் வச்சிட்டாங்க....அங்கிள்கு முக்கியமான எல்லாரும் வந்துட்டு இருந்தாங்க....

கொஞ்ச நேரத்துல கெஸ்ட் வருறது நின்னுடுச்சு....அதுக்கப்புறம் நாங்க ஃப்ரெண்ட்ஸ் மட்டும் டேன்ஸ் பாட்டுன்னு என்ஜாய் பண்ணிட்டு இருந்தோம்.....

அப்போ டக்குன்னு க்ரிஷ் ஸ்டேஜ்க்கு வந்தான்....

"ஹலோ எவ்ரி ஒன்....."னு சொன்னான்...

எல்லாரும் திரும்பி அவனப் பார்த்தாங்க.... என்ன பண்ணிட்டு இருக்குறான் இவன்னு நான் பாத்துட்டு உக்கார்ந்து இருந்தேன்....

"ம்ம் இன்னைக்கு என் பெஸ்ட் ஃப்ரெண்ட் அண்ட் என் மச்சான் ரிஷிக்கும் அண்ட் அருமை உடன்பிறவா சகோதரி எங்க வாயாடி நிஷுக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்கு....எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்குறோம்....

இந்த சந்தோஷம் மட்டும் இல்லாம நான் இப்போ டபுள் சந்தோஷத்துல இருக்குறேன்....ஏன்னு கேட்குறிங்களா...."னு சொல்லிட்டு க்ரிஷ் லைட்டா சிரிச்சான்...

" ஒரு பையன் எப்போ
இந்த உலகத்தையே ஜெய்ச்ச மாதிரி ஃபீல் பண்ணுவான் தெரியுமா....தன்னோட குழந்தை நெகமும் சதையுமா தன்னோட மனைவி கருவுல வளந்துட்டு இருக்குதுன்னு தெரிஞ்ச அந்த செகண்ட்....தான் அப்பா ஆகப் போறோன்ற அந்த செகண்ட் ஃபீல் பண்ணுவான்....

நானும் இப்ப அப்புடி தான் ஃபீல் பண்ணுறேன்....எஸ் நான் அப்பா ஆகப் போறேன்....என் முகி அம்மா ஆகப் போறா......."னு கண்ணுல கண்ணீர் தொடச்சிட்டே சொன்னான்.....அதை சொன்னதும் ப்ரவீன் விசில் அடிச்சிட்டு கங்ராட்ஸ் மச்சான்னு கீழ இருந்து கத்துனான்....எங்க ஃப்ரெண்ட்ஸ் என் பக்கத்துல சிரிச்சிட்டே உக்காந்து இருந்தாங்க....

சுதா மா சுப்பு அப்பா கண்ணுல கண்ணீர்....அந்த ஹால்ல இருந்த எல்லாரும் க்ளேப் பண்ணிட்டு அவுங்களோட வாழ்த்த சொன்னாங்க....

 நறுமுகை!! (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora