கிருஷ்ணா pov:அப்பா என்னைய அடிப்பாருன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல....நான் அமைதியா நின்னுட்டு இருந்தேன்....முகி என் பக்கத்துல அழுதுட்டே நின்னுட்டு இருந்தா.....
அப்பா பேச ஆரம்பிச்சாரு....
"எல்லாமே உனக்கு விளையாட்டா இருக்குதுல்ல.....உன் மேல நாங்க வச்சிருந்த நம்பிக்கைக்கு நல்ல பதிலடி குடுத்துட்ட....ஏன் பொய் சொன்ன....என்ன முகி இதுக்கு நீயும் உடந்தையா....உனக்கு அம்மாவ பாக்கனும் போல இருந்தா என்கிட்ட சொல்லியிருக்கலாமே நான் கூட்டிட்டு வந்துருப்பனே....இப்புடி ரெண்டு பேரும் தனியா வந்து எதாவது ஆகிருந்துச்சுன்னா என்ன பண்ணியிருப்பிங்க...."னு முகிய கேட்டாரு...
"அப்பா...இதுல முகிக்கு எந்த சம்மந்தமும் இல்லை....சொல்லப்போனா அவளுக்கு தேனிக்கு வருறதே தெரியாது....அவக்கிட்ட எங்க போறோம்னு சொல்லாம தான் கூட்டிட்டு வந்தேன்....உங்கக்கிட்ட பொய் சொன்னது தப்புதான் பா....ஸாரி பா...."னு சொன்னேன்
"இங்க பிரச்சனை நீ பொய் சொன்னது இல்லை....எந்த விஷ்யத்துக்கு பொய் சொன்னன்றதுதான்....அன்னைக்கே பாத்தல்ல...எத்தனை பேர் அவள தேடிட்டு வந்தாங்கன்னு....எவ்வளோ கஷ்டப்பட்டு அவள நம்மக்கூட சென்னைக்கு கூட்டிட்டு போனோம்னு தெரியும் தான....."னு கேட்டாரு
"தெரியும் பா....நீங்க எல்லாரும் அவளுக்கு ஆபத்து வந்துர கூடாதுன்னு நினைக்குறிங்க.....ஆனா அவளுக்கு நிஜமாவே என்ன வேணும்னு உங்களுக்கு தெரியாது பா....அவ நம்ம கூட இருக்குறா....ஆனா அவ முழுசா சந்தோஷமா இல்லை....அவளோட சந்தோஷம் அவ அம்மா அந்த சந்தோஷத்தை அவளுக்கு குடுக்கனும்னு நினைச்சேன் பா....அதான் கூட்டிட்டு வந்தேன்....நான் கூட்டிட்டு வந்த விதம் வேணும்னா தப்பா இருக்கலாம் ஆனா என்னோட நோக்கம் தப்பு இல்ல பா.....
இதுக்குமேல எனக்கு சொல்றதுக்கு ஒன்னும் இல்லை....என்னைய மன்னிச்சிடுங்க...."னு சொல்லிட்டு போய்ட்டேன்....
அதுக்கப்புறம் நான் அன்னைக்கு ஃபுல்லா ரூம் விட்டு வெளில போகல....கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சு நான் யாருன்னு போய் பாத்தேன்....வெளில அப்பா சாப்பாடு எடுத்துட்டு வந்து நின்னுட்டு இருந்தாரு....
KAMU SEDANG MEMBACA
நறுமுகை!! (முடிவுற்றது)
Fiksi Umumஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...