நறுமுகை pov:
கிரிஷ் நாங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா என்கிட்ட பேசனும்னு சொன்னான்....நானும் அவன்கிட்ட ஸ்கூல்ல வச்சு ஏன் அப்புடி சொன்னான்னு கேட்கனும்னு நினைச்சேன்....
நைட்டு சாப்டதுக்கு அப்புறமா நானும் அவனும் மாடிக்கு பேசலான்னு போனோம்.....
கிரிஷ் என்கிட்ட ரேஷ்மாவ பத்தியும் அவக்கிட்ட இருந்து விலகி இருக்கத்தான் அப்புடி சொன்னதாகவும் என்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னான்
எனக்கு அதைக்கேட்டு கொஞ்சம் நிம்மதியா இருந்தாலும்....இவன் அப்புடி சொன்னதால புதுசா பிரச்சனை எதாவது வந்துருமோன்னு எனக்கு பயமா இருந்துச்சு....
"கிரிஷ் நீ ஒரு பிரச்சனையில இருந்து தப்பிக்க இன்னொரு பிரச்சனைய உறுவாக்கிட்டியோன்னு எனக்கு தோனுது....நீ என்னைய லவ் பன்னலன்றது உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்....ஒருவேளை ரேஷ்மா அஙகிள் கிட்டையோ....இல்லை ஆண்டி கிட்டையோ நீ என்னைய லவ் பன்றன்னு சொல்லிட்டா பெரிய பிரச்சனையாகிடும் கிரிஷ்....."னு நான் சொல்லிட்டு இருந்தேன்
"எதை ரேஷ்மா எங்கக்கிட்ட சொன்னா பெரிய பிரச்சனையாகிடும்னு ரெண்டு பேரும் பேசிட்டு இருக்குறிங்க...."னு ஆண்டி பின்னாடி இருந்து கேட்டாங்க...
எங்க ரெண்டு பேருக்கும் அவுங்க வந்ததே தெரியல......என்ன சொல்லி சமாளிக்குறதுன்னு ரெண்டு பேரும் முழிச்சிட்டு இருந்தோம்....
பேசாம உண்மைய சொல்லிடலாமான்னு எனக்கு தோனுச்சு....
"என்ன டா ரெண்டு பேரும் அமைதியா நிக்குறிங்க...."னு ஆண்டி கேட்டாங்க
நான் உண்மைய சொல்லிடலான்னு போனேன்...
"அதுவந்து ஆண்டி....."னு நான் சொல்ல ஆரம்பிச்சேன்...
அதுக்குள்ள கிருஷ்ணா என்னைய பேச விடாம அவன் பேச ஆரம்பிச்சுட்டான்"அது ஒன்னும் இல்லை மா...நான் சொல்றேன்....இன்னைக்கு ஸ்கூல்ல ரேஷ்மாக்கும் இன்னொரு பொண்ணுக்கும் பயங்கர சண்டை.....சண்டை பெருசானதுனால மேம் ப்ரின்சிக்கிட்ட கூட்டிட்டு போய்டாங்க....அதை இவ பாத்துருப்பா போல அதான் என்கிட்ட சொல்லிட்டு இருந்தா....அதான் அவ என் ஃப்ரெண்ட் ரிஷியோட தங்கச்சி தான்னு சொல்லிட்டு இருந்தேன் வேர ஒன்னும் இல்லை...."னு கிருஷ்ணா சொன்னான்
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...