நறுமுகை pov:ரொம்ப நாள் கழிச்சு ஸ்கூல்கு போனேன்....எல்லா டீச்சரும் ஸ்கூல்ல அக்காவுக்காக வருத்தப்பட்டாங்க....
நான் ஸ்கூல்கு போகாதப்போ நடத்துன பாடத்துல சந்தேகம் இருந்தா தனியா எனக்கு அதை நடத்துரேன்னு சொன்னாங்க....அன்னைக்கு நான் ஸ்கூல் முடிச்சுட்டு வீட்டுக்கு போக பஸ்காக நின்னுட்டு இருந்தேன்.....அப்போ கிருஷ்ணா அந்த வழியா வண்டில போனான்....அவன் மொதல்ல என்னைய பாக்கல.... அதுக்கப்புறம் என்னைய பாத்துட்டு வண்டிய கொண்டு வந்து என் பக்கத்துல நிறுத்துனான்.....அவன நான் பாத்ததும் என்னைய பாத்து சிரிச்சான் நானும் அவன பாத்து சிரிச்சேன்.....
"நறுமுகை....ஏன் இங்க நின்னுட்டு இருக்குற......."னு கேட்டான்
"நேரம் போகல அதான் வந்து இங்க நின்னுட்டு இருக்குறேன்....."
"ஓய் என்ன கிண்டல் பன்றியா...."னு கேட்டான்
"பின்ன பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு என்ன பன்னுவாங்க....பஸ் வரல அதான் பாத்துட்டு நின்னுட்டு இருக்குறேன்...."
"தெரியாம உன்ட கேட்டேன்.....என்னய மன்னிச்சிடு மா.....சரி எவ்வளோ நேரம் இங்க இப்புடிய நின்னுட்டு இருக்கப்போற சாய்ங்காளம் ஆச்சு....வா நான் உன்னைய விட்டுடுறேன்...நான் வீட்டுக்குத்தான் போறேன்..."னு சொன்னான்
எனக்கு அவன் அப்புடி சொல்லவும் தூக்கிவாரிப் போட்டுட்டுருச்சு....
"என்ன நீ வண்டில உன்கூட வர சொல்ற...."
"உனக்கு கண்ணு தெரியுதா....வண்டிய நான்தான ஓட்டுறேன் அப்போ என்கூடதான் வரனும்...."னு சொன்னான்
"நான் உன்கூட வரமாட்டேன் பா...
...அம்மாக்கு தெரிஞ்சா அவ்வளோ தான்...அதோட என் அப்பத்தாக்கு தெரிஞ்சா வீட்டுல பூகம்பமே வந்துரும்....""ஏன் என்கூட வந்தா திட்டுவாங்க..."
"ஏன்னா நீ ஆம்பள பையன்....உன் பக்கத்துல வந்து நான் உக்காரக்கூடாது...."
"அப்டின்னு யாரு சொன்னது....நீ என்னோட ஃப்ரெண்டு தான....அப்புறம் என்ன...."
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...