நறுமணம் 49

3.7K 187 41
                                    


முகி pov:

சக்தி அண்ணா ப்ரவீனோட அம்மா வேற ஒருத்தவங்கன்னு சொன்னதும் எனக்கு தூக்கி வாரி போட்டுருச்சு....

"என்ன சொல்லுறிங்க அண்ணா என்னால நம்பவே முடியல...."னு சொன்னேன்

அவுங்க லைட்டா என்னைய பாத்து சிரிச்சிட்டு சொல்ல ஆரம்பிச்சாங்க....

"நான் சின்ன பையனா இருந்தப்போ அம்மா அப்பா ரெண்டு பேருமே என்மேல பாசமாதான் இருந்தாங்க.....திடிர்னு ஒருநாள் அம்மா என்னைய ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிக்கிட்டு போனாங்க......அப்போதான் நான் ப்ரவீன முதல்ல பாத்தது.....இன்னும் எனக்கு அது ஞாபகத்துல இருக்குது.....

அவன் அம்மா குழந்தை பொறக்குறப்போவே இறந்துட்டாங்கன்னு சொன்னாங்க....
அப்பா ப்ரவீன வீட்டுக்கு கூட்டிட்டுப் போகனும்னு அம்மாக்கிட்ட சொன்னாரு....ஆனா அம்மா முடியாதுன்னு சண்டை போட்டாங்க....

என்னால அந்த வயசுல அதுக்கான அர்த்தத்தை புரிஞ்சுக்க முடியல....ஏன் அம்மா குழந்தைய வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்லுறாங்கன்னு எனக்கு புரியல.....
எனக்கு தோனுனது ஒன்னே ஒன்னு தான் குட்டி குழந்தையா இருந்த ப்ரவீன வீட்டுக்கு கூட்டிட்டு போகனும் அவ்வளோதான்....

அதே மாதிரி அப்பா அம்மா சொன்னது கேட்காம ப்ரவீன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு....
அவன் வந்ததுக்கு அப்புறம் அம்மா அப்பாக்கூட சண்டை போட்டுட்டே இருப்பாங்க....

அவுங்க ஏன் சண்டை போடுறாங்கன்னு எனக்கு புரியல....
அம்மாக்கு ப்ரவீன பார்த்தாலே புடிக்காது....அப்பா மட்டும் தான் அவன் மேல் பாசமா இருப்பாரு....
அதுக்கான காரணத்தையும் என்னால அந்த வயசுல புரிஞ்சுக்க முடியல....
நானும் அவன் சின்ன புள்ளையா இருந்தப்போ இருந்து பாசமா தான் பாத்துக்கிட்டு வறேன்......

அப்புறம் ப்ரவீன வெறுத்த அம்மா கொஞ்சம் கொஞ்சமா என்மேலையும் வெறுப்ப காட்ட ஆரம்பிச்சாங்க....வீட்டுக்கு சரியா வரமாட்டாங்க.......அப்பா எங்க இருக்குறன்னு கேட்டாலும் சொல்ல மாட்டாங்க.....

 நறுமுகை!! (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang