க்ரிஷ் pov:நாங்க எல்லாரும் முகிய ஹாஸ்பிட்டல்க்கு கொண்டு வந்து கிட்டதட்ட மூனு மணி நேரம் ஆச்சு.....இன்னும் அம்மா முகி நார்மலான கண்டிஷன்க்கு வரலன்னு சொல்லிட்டு இருந்தாங்க.....எனக்கு நேரம் ஆக ஆக பயம் அதிகமாய்ட்டே இருந்துச்சு.....
முகி திரும்பி வந்துருவா வந்துருவான்னு நான் என் மனசுக்குள்ள சொல்லிட்டே இருந்தேன்.......
"அண்ணா கவலைப்படாத முகி திரும்பி நம்மக்கூட நம்ம வீட்டுக்கு வருவா அவளுக்கு ஒன்னும் ஆகாது....."னு நவீன் என் பக்கத்துல உக்காந்துட்டே சொன்னான்
முகி எந்தளவுக்கு என் வாழ்க்கையில முக்கியமானவன்னு தெரியாம அவன் எதார்த்தமா அதை சொன்னாலும்....அவன் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ஆறுதலா இருந்துச்சு.....
நான் அழுதுட்டே அவன கட்டிப்புடிச்சிக்கிட்டேன்.....
கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா வெளியில வந்தாங்க.....எல்லாரும் அவுங்க என்ன சொல்லப்போறாங்கன்னு பதட்டத்தோட பாத்துட்டு இருந்தாங்க.....
"என்னாச்சு சுதா.....முகி இப்ப எப்புடி இருக்குறா....."னு தாத்தா கேட்டாரு
"மாமா நம்ம முகிக்கு இனிமேல் எந்த பிரச்சனையும் இல்ல.....அவ சீக்கிரம் நல்லாகிடுவா...."னு சொன்னாங்க
அவுங்க சொன்ன அந்த வார்த்தைய கேட்டதுக்கு அப்புறம் தான் என்னோட உயிரே திருப்பி வந்த மாதிரி இருந்துச்சு....
"மா அவள பாக்கலாமா....."னு கேட்டேன்....
"இல்ல க்ரிஷ் இப்ப வேண்டாம்....கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாரும் பாக்கலாம்...."னு அம்மா சொல்லிட்டாங்க...
எது எப்புடியோ என் முகி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல எனக்கு அதுவே போதும்.....
ஆனாலும் அவள எப்ப பாப்போன்ற எதிர்பார்ப்பு இருந்துட்டே இருந்துச்சு....எல்லாரும் வெளில வெய்ட் பண்ணிக்கிட்டு இருந்தோம்.....அம்மா ஒவ்வொருத்தரா போய் முகிய பாத்துட்டு வரலான்னு சொன்னாங்க....
VOUS LISEZ
நறுமுகை!! (முடிவுற்றது)
Fiction généraleஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...