நறுமுகை pov:அடுத்த நாள் காலையில நான் ரூம்ல உக்காந்து இருந்தேன்....கிருஷ்ணா அம்மா உள்ள வந்து என் பக்கத்துல உக்காந்தாங்க....
"நறுமுகை நம்ம நாளைக்கு சென்னைக்கு கிளம்பனும்...."னு சொன்னாங்க
"சரிங்க...."
"என்ன நீ .....என் புருஷன மட்டும் பாசமா அங்கிள்னு கூப்டுற....என்னைய மட்டும் யாரையோ கூப்டுற மாதிரி.... சரிங்க....வாங்க....போங்கன்னு சொல்ற....டூ பேட்...என்னைய உனக்கு புடிக்கலன்னு நினைக்குறேன் ."னு சிரிச்சிட்டே சொன்னாங்க
"அச்சோ அப்புடிலாம் இல்லை.....உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்....சரி இனிமேல் உங்கள நான்ஆண்டின்னு கூப்டுறேன்....
நீங்களும் அதே மாதிரி என்னைய முகினுதான் கூப்டனும்....எனக்கு நெருக்கமானவங்க எல்லாரும் என்னைய அப்பேடிதான் கூப்டுவாங்க....""சரி....டீல் அக்செப்டட்..."னு சொன்னாங்க
"ஆண்டி...நான் ஒன்னு கேட்கலாமா....."
"கேளு மா...."
"நிஜமாவே நான் உங்களுக்கு தொந்தரவா இல்லையில...."
"முகி மொதல்ல.... இது அடுத்தவங்க வீடு அப்புடின்ற எண்ணத்தை உன் மனசுல இருந்து தூக்கி போடு....இனிமேல் இது உன்னோட வீடுன்னு உன் மனசுல பதிய வச்சிக்கோ....உன் அம்மா அப்பாக்கிட்ட நீ எப்புடி உரிமையா இருப்பியோ அதே மாதிரி எங்கக்கிட்டையும் இரு....உன்னைய யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க....
இப்பவும் சொல்றேன் நாங்க உன்னைய பாரமா நினைக்கல....உங்க தாத்தா எங்களுக்கு நிறைய பன்னிருக்காரு....அவருக்காக நாங்க இதைக்கூட பன்னலன்னா நாங்க மனுஷங்களே இல்லை....."னு சொன்னாங்கநான் அவுங்கள பாத்து சிரிச்சிட்டே சரின்னு தலையாட்டுனேன்
"ஆண்டி என்னோட ஸ்கூல்...."
"அதப்பத்தி நீ கவலைப்படாதே....உன் அங்கிள் உன்னோட ஸ்கூல்ல போய் டீஸி வாங்கிட்டு வந்துருவாரு.....உன்னோட வீட்டுல போய் எல்லா செர்டிஃபிக்கட்சையும் வாங்கிட்டு வர சொல்லிருக்காரு....உன் படிப்பு பாதிக்காது....சென்னையிலையே நீ சேந்துக்கலாம்...."னு சொன்னாங்க...
ESTÁS LEYENDO
நறுமுகை!! (முடிவுற்றது)
Ficción Generalஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...