சுப்பு pov:ரேஷ்மா என்கிட்ட தேனில தான் எல்லாரும் இருக்குறோம்னு சொல்லவும் எனக்கு அப்புடியே ஒரு நிமிஷம் திகைச்சு போய் நின்னுட்டேன்....என்ன சொல்லுறதுன்னே தெரியல....
என்கிட்ட கிரிஷ் திருச்சில இருக்குற சந்துருவோட சொந்தக்காரங்க வீட்டுக்கு போறதா சொல்லிதான் பெர்மிஷன் வாங்குனான்....அவன் ஏன் பொய் சொன்னான்னு புரியல....அதுக்கும் மேல முகி அவன்கூட போயிருக்கா....எங்க ஊருக்காரங்க அவள பாத்துட்டு போய் வடமலைக்கிட்ட சொல்லி எதாவது ஆச்சுன்னா நான் தேவிக்கு என்ன பதில் சொல்லுவேன்....என்ன பண்ணுறதுன்னு ஒன்னுமே புரியாம உக்காந்து இருந்தேன்....
நம்மலே நேர்ல போறதுதான் நல்லதுன்னு நான் தேனிக்கு போக ரெடியாகிட்டு இருந்தேன்....
சுதா அப்போ உள்ள வந்தா...."என்னங்க இந்த நேரத்துல எங்க ரெடியாகிட்டு இருக்குறிங்க...."னு கேட்டா
"சுதா நான் கொஞ்சம் வேலையா வெளில கிளம்புறேன்....நான் வர எப்புடியும் ரெண்டு நாள் ஆகிடும்...."
"அதெல்லாம் சரிதாங்க....இந்த நேரத்துல கிளம்பனுமா....காலையில சீக்கிரமா எந்திருச்சு கிளம்புங்க...."
"இல்லமா புரிஞ்சுக்கோ....ரொம்ப அவசரமான வேலை...."
"என்னங்க எதையோ என்கிட்ட நீங்க மறைக்கிரிங்க....என்னன்னு சொல்லுங்க...."
"அதெல்லாம் ஒன்னும் இல்லமா வொர்க் டென்ஷன் அவ்வளோ தான்....."
"உங்க கூட நான் இருபது வர்ஷமா வாழ்ந்துருக்கேன்.....உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும்....என்ன வேலையில டென்ஷனா இருந்தாலும் வீட்டுக்கு வந்தா அதை வெளில காட்டிக்க மாட்டிங்க....அதோட முக்கியமா இவ்வளோ பதட்டமா இருக்க மாட்டிங்க....என்னன்னு சொல்லுங்க....."னு என் பக்கத்துல வந்து என் கைய புடிச்சிட்டு கேட்டா..
"சுதா....இப்ப நான் சொல்றது உனக்கு ரொம்ப அதிர்ச்சிய குடுஙக்க போகுது....கிரிஷும் முகியும் திருச்சிக்கு போகல....எல்லாரும் தேனிக்கு போயிருக்காங்க...."னு சொன்னேன்...
VOUS LISEZ
நறுமுகை!! (முடிவுற்றது)
Fiction généraleஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...