கிருஷ்ணா pov:
நவீன் லீவ் விட்டதால போர் அடிக்குது அதுனால பிக்னிக் போகலான்னு அம்மாக்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தான்....
"மா ஸம்மர் லீவ் விட்டாச்சு....எங்கையாவது பிக்னிக் போகலாம் மா ப்ளீஸ்....வீட்டுல போர் அடிக்குது...."னு சொன்னான்
"எனக்கு தெரியாது டா....உங்க அப்பா வந்த உடனே அவர்கிட்ட கேளு....ஏன்னா அவருதான் எதாவது முக்கியமான வேளை வச்சுக்கிட்டே இருப்பாரு.....நான் போகலாம் சொல்லிடுவேன்...அப்புறம் அவரு என்மேல கோபப்படுவாரு"னு அம்மா சொன்னாங்க
"டேய் நான் தான் அப்பா வந்த உடனே அவர்க்கிட்ட கேட்குறேன்னு சொன்னேன்ல...அப்புறம் என்ன....அமைதியா இரு....நம்ம பிக்னிக் போறோம்....ஆட்டம் போடுறோம்....என்ஜாய் பன்றோம்......"னு சொன்னேன்
கரெக்டா அப்பாவும் வந்துட்டாங்க....
"ஹாய் குட்டீஸ்....பயங்கரமான டிஸ்கஷன் போய்கிட்டு இருக்குது போல.....
சரி சரி சுட சுட சமோசா வாங்கிட்டு வந்துருக்கேன்....அதுவும் உங்களோட ஃபேவரெட் ராமு அண்ணா கடையில இருந்து....எதுவா இருந்தாலும் சாப்டுட்டே டிஸ்கஸ் பன்னுங்க....
சுதா மா இந்தா எல்லாருக்கும் எடுத்துக்குடு....நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வந்துடுறேன்....."னு அப்பா சொல்லிட்டு ரூம்க்கு போய்டாரு....அம்மா எல்லாருக்கும் எடுத்துக்குடுத்துட்டு இருந்தாங்க...
எல்லாரும் உக்காந்து சாப்டுட்டு இருந்தோம் அப்பா வந்தாங்க....
"என்னங்க நீங்க வர லேட் ஆகனும்னு உங்கள தவிர எல்லாருக்கும் டீ போட்டுட்டேன்...உங்களுக்கு டீ போடவா இல்லை காஃபீ ஓகேவா...."னு அம்மா கேட்டாங்க
"இல்லை மா காஃபியே குடு....."னு அப்பா சொன்னாரு....
அம்மா காஃபி போட்டு போய்டாங்க....
"பா நாங்க எல்லாரும் இந்த லீவுக்கு எங்கையாவது பிக்னிக் போனா நல்லா இருக்கும்னு ஃபீல் பன்றோம்....இந்த லீவ் விட்டா அவ்வளோ தான்.....நெக்ஸ்ட் இயர் நான் ட்வெல்த் ஸோ நோ என்ஜாய்மெண்ட் படிக்கனும்....அதுக்கு அடுத்த வர்ஷம் முகியும் ட்வெல்த் போய்டுவா....நம்ம நர்மதாவும் டென்த் எழுதுவா.....மூனு வர்ஷத்துக்கு அவ்வளவா எங்கையும் போக முடியாது.....அதுனால எங்கையாவது பிக்னிக் போகலாம் பா....ப்ளீஸ்....."னு சொன்னேன்
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...