Reshma amma pov:கிரிஷ் அப்பாவும் அந்த போலிஸ்காரரும் வேளைக்காரங்கல பாக்கனும்னு சொல்லவும் எனக்கு கொஞ்சம் பயமாகிடுச்சு.....என்ன சொல்றதுன்னு தெரியல.....நான் தான் இதை பண்ணுனேன்னு என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சது அவ்வளோ தான்....என்ன நடக்கும்னே தெரியாது.....
நான் அமைதியா நின்னுட்டு இருந்தேன்.....
என் வீட்டுக்காரர் எல்லா வேளைக்காரங்களையும் கூப்டாரு....எல்லாரும் வந்துட்டாங்க....."அன்னைக்கு ஃபங்க்ஷன்ல உங்கள்ல யாரோ ஒருத்தர் ஒரு பொண்ணுக்கிட்ட லெட்டர் குடுத்துருக்குறிங்க.....அந்த லெட்டர்னால அந்த பொண்ணு இறந்து போகுற நிலைமைக்கு போய்ட்டா.....அது யாருன்னு சொல்லிட்டிங்கன்னா உங்கள ஒன்னும் பண்ண்மாட்டோம்.....ஒழுங்கா உன்மைய சொல்லுங்க...."னு அந்த போலிஸ்காரர் சொன்னாரு
எல்லா வேளைக்காரங்களும் அவரு சொன்னது கேட்டு ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கிட்டாங்க....நான் லெட்டர் குடுக்க சொன்னவன் என்னைய பாத்தான்....நான் அவனைப் பாத்து உன்மைய சொல்லக்கூடாதுன்னு சைகையில காமிச்சேன்.....அவனும் சரின்னு தலையாட்டுனான்.....
"அவரு தான் இவ்வளோ தூரம் கேட்குறாருல்ல வாயத் திறந்து பதில் சொல்லுங்க...."னு என் வீட்டுக்காரர் சொன்னாரு
"இல்லைங்க ஐயா நாங்க யாரும் எந்த லெட்டரையும் கொண்டு போய் குடுக்கல....எங்களுக்கு நீங்க இப்போ சொல்லிதான் தெரியுது....."னு எங்க வீட்டுல வேளைப் பாக்குற சமையல்காரன் சொன்னான்
"என்ன மிஸ்டர் சுப்ரமணியன் இப்புடி சொல்லுறாங்க.....நிஜமா லெட்டர் வந்து குடுத்தாங்கன்னு நறுமுகை சொன்னாங்கலா...."னு கேட்டாரு
"ஆமா சார் யாரோ குடுத்துருக்குறாங்க ஆனா உன்மைய சொல்ல மாட்டேங்குறாங்க....."னு கிரிஷ் அப்பா சொன்னாரு...
"ஏன் சுப்ரமணியன் நீங்க முகிய கூட்டிட்டு வந்து யாரு குடுத்தாங்கன்னு அடையாளம் காட்ட சொல்ல வேண்டியதுதான...."னு என் வீட்டுக்காரர் கேட்டாரு..
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...