நறுமணம் 57

3.5K 207 73
                                    


முகி pov

அண்டி கோமாக்கு போய் கிட்டதட்ட ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு.....ரிஷி அண்ணாவும் ரேஷ்மாவும் காலேஜ்க்கு வரவே இல்ல....

நாங்க அவுங்கக் கூட அவுங்க வீட்டுலயே தங்கி இருந்தோம்.....அங்கிள் அப்புடியே அமைதியா தான் உக்காந்துட்டு இருக்குறாரு....ஆனா முன்னாடிக்கு கொஞ்சம் பரவாயில்லை கொஞ்சம் கொஞ்சம் எல்லாருக்கிட்டையும் பேசுறாரு....
ரேஷ்மா முன்னாடிக்கு இப்போ ரொம்ப அமைதியாகிட்டா......முன்னாடி மாதிரி திமிரா பேசுறது இல்லை.....

நிஷுக்கு ரிஷி அண்ணாக்கூட இருக்கனும்னு ஆசைதான் ஆனா அவ காலேஜ் திரும்ப போக வேண்டிய கட்டாயத்துல இருந்தா....அதுனால போக மனசு இல்லாம இருந்தா.....ரிஷி அண்ணாதான் நான் பாத்துக்குறேன்னு அவளுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வச்சான்.....அவளும் அரை மனசோட கிளம்பி போய்ட்டா.....

ஸ்வாத்திக்கூட ரொம்ப ஃபீல் பண்ணுனா....அன்னைக்கு விளையாட்டா நான் கோவத்துல உன்னைய இந்த நிலமைக்கு ஆளாக்குனவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகனும்னு சொன்னேன் ஆனா நிஜமாவே ஆகிடுச்சுன்னு ரொம்ப ஃபீல் பண்ணுனா.....

அப்புறம் ப்ரவீனும் எனக்கு கால் பண்ணுனான்....

"முகி ரேஷ்மாவும் ரிஷியும் இப்ப எப்புடி இருக்குறாங்க....."னு கேட்டான்

"எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல.....எல்லாம் கண்ணு மூடி கண்ணத் திறக்குறதுக்குள்ள இப்புடி ஆகிடுச்சு.....பாவம் டா ரிஷி அண்ணாவும் ரேஷ்மாவும்....இன்னும் அப்புடியே தான் இருக்குறாங்க....."னு சொன்னேன்

"நீ அவளுக்காக வருத்த படுற ஆனா அவ இந்நேரம் உனக்கு எப்படி கெட்டது பண்ணுறதுன்னு யோசிச்சிட்டு இருப்பா.....

அதோட அந்த ஆண்டி உன்னைய கொள்ள நினைச்சாங்கல்ல அதுக்கான தண்டனை தான் இது......."னு சொன்னான்

எனக்கு ஷாக் ஆகிடுச்சு என்னைய கொலப் பண்ண நினைச்சது ரேஷ்மா அம்மாதான்னு எனக்கு ஸ்வாத்திக்கு நிஷுக்கு மட்டும்தான் தெரியும்....இவனுக்கு எப்புடி தெரிஞ்சதுனு யோசிச்சிட்டே இருந்தேன்....

 நறுமுகை!! (முடிவுற்றது)Where stories live. Discover now