நறுமணம் 12

4.3K 180 45
                                    


நறுமுகை pov:

கிருஷ்ணா அந்த பொண்ணுகிட்ட என்னைய லவ் பன்றேன்னு சொல்லவும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல....

அந்த பொண்ணு அதைக்கேட்டு அழுக ஆரம்பிச்சுட்டா....எனக்கு என்ன பன்றதுன்னு தெரியல....அந்த பொண்ணு யாருன்னு எனக்கு தெரியல....எதுக்காக கிருஷ்ணா அந்த பொண்ணுக்கிட்ட இவ்வளோ கோவமா பேசுனான்னு தெரியல....ஆனா அந்த பொண்ணு அழுகுறதப்பாத்து எனக்கு ரொம்ப கஷ்டமாய்டுச்சு.....

கிருஷ்ணா pov:

காலையில அப்பா என்கிட்ட நறுமுகைக்கு அட்மிஷன் போட்டாச்சு....டி1 செக்க்ஷன் பாத்து சாய்ங்காலம் அவள கூட்டிட்டு வான்னு என்கிட்ட சொல்லிட்டு போனாரு....

காலையில ப்ரேக் பெல் அடிச்சதும் நான் முகிய பாத்துட்டு க்ளேஸ் செட் ஆச்சான்னு கேட்டுட்டு அவள அப்புடியே கேண்டின் கூட்டிட்டு போய் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இண்ட்ரட்யுஸ் பன்னாலன்னு அவ க்ளாஸ்க்கு கிளம்புனேன்....

"கிரிஷ் ப்ரேக் பெல் அடிச்சதும் எங்க போற...."னு ரிஷி கேட்டான்

"இல்ல மச்சி உங்க அப்பா ஒரு பொண்ணுக்கு
இந்த ஸ்கூல்ல சேற ரெக்கம்மண்டேஷன் பன்னாருல்ல.... அந்த பொண்ணு இன்னைக்கு ஸ்கூல்ல ஜாய்ன் பன்னிட்டா....அந்த பொண்ணு கிராமத்துல இருந்து வந்ததால கொஞ்சம் எதை பாத்தாலும் பயப்புடுறா...அதான் என்ன பன்றான்னு பாத்துட்டு வரலான்னு கிளம்புறேன்....."னு சொன்னேன்

"ஓ அப்புடியா....எந்த செக்க்ஷன்...."னு ரிஷி கேட்டான்....

"டி1 டா...."

"டி1 ஆ....அப்போ அந்த பொண்ணு தமிழ் மீடியமா....."

"ம்ம்....ஆமா...."

"சரி அப்போ ஓகே மச்சான்...
நான் கேண்டின் போரேன்....நீ டேரெக்டா அங்க வந்துடு...."னு சொன்னான்

நான் சரின்னு சொல்லிட்டு முகியோட க்ளாஸ்க்கு போய் அவள கேட்டேன்....அவ ஃப்ரெண்டு கூட கேண்டின் போயிருக்குறதா சொன்னாங்க....

பாருடா வந்த மொதல் நாளே கேண்டின் போய் சாப்டுற அளவுக்கு ஃப்ரெண்ட் புடிஞ்சுட்டாளா....நான் கூட பயந்துருப்பாளோன்னு நினைச்சேன் ....பரவால்ல நல்லா முன்னேறிட்டான்னு சிரிச்சிட்டே நானும் கேண்டின் போனேன்.....
அங்க போய்டு முகி எங்க உக்காந்து இருக்குறான்னு பாத்துட்டு இருந்தேன்...

 நறுமுகை!! (முடிவுற்றது)Where stories live. Discover now