நறுமணம் 66

3.1K 173 26
                                    

Flashback continues:

  தாத்தா என்கிட்ட ஐடியா இருக்குதுன்னு சொல்லவும் எனக்கு ஒன்னும் புரியல...

"தாத்தா என்ன ஞொல்லுறிங்க என்ன ஐடியா வச்சிருக்குறிங்க..."

"ம்ம்...சொல்லுறேன்...பொறு..."

"தேவி நீ இந்த தடவ வாயத் திறந்து பேசுனாதான் நான் சொல்லப் போறது நடக்கும்...."

"சொல்லுங்க பா நான் என்ன பண்ணனும்...."

"சொல்லுறதை விட நேரா களத்துல இறங்கிட்டா என்ன....என்கூட வாங்க...."

"எங்க தாத்தா...."

"சொல்லுறேன் ரெண்டு பேரும் வாங்க..."னு சொல்லிட்டு தாத்தா எங்கள நேரா உன் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாரு....

"அச்சச்சோ என்னடா சொல்லுற..‌.எங்க வீட்டுக்கா அப்பா என்ன சொன்னாரு....அவரக்கூட சமாளிச்சிடலாம்னு வை....ஆனா அந்த அப்பதான் கிளவி என்ன சொல்லுச்சு...‌அதுக்கு சண்டை போடனும்னா கிளம்பிடுமே‌...."

"ஆமா நாங்களும் அதேதான் நினைச்சோம்...."

"அப்புறம் என்னாச்சு...."

"ம்ம் சொல்லுறேன்...."

"தாத்தா எங்க ரெண்டு பேரையும் உன் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாரு அங்க போய் நின்னுட்டு சத்தமா உன் அப்பா பேர சொல்லி கத்த ஆரம்பிச்சிட்டாரு....."

"யோவ் வடமலை வெளில வாயா...."

"தாத்தா என்ன பண்ணுறிங்க....மாமா மனசுல என்னைய இடம் பிடிக்க கூட்டிட்டு வந்திங்களா இல்ல ஒரேயடியா என் காதலுக்கு சமாதி கட்டி வந்திங்களா......"

"டேய் இதுக்கு முன்னாடி நான் குடுத்த ஐடியா எல்லாம் வொர்க் அவுட் ஆகியிருக்கா இல்லையா...."

"ஆகியிருக்கு...."

"அப்போ இந்த தடவையும் நான் பண்ணுறதை அமைதியா கேளு..."

"சரி என்னமோ பண்ணுங்க...."னுசொல்லிட்டு நான் அமைதியாகிட்டேன்....

 நறுமுகை!! (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang