கிருஷ்ணா pov:ஃபங்ஷன்ல முகி ரொம்ப அமைதியா இருந்தா....வீட்டுக்கு போரப்பவும் என்கிட்ட எதுவும் பேசல....வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் என்னைய திரும்பி கூட பாக்காம அவ ரூம்க்கு போய்ட்டா....இவ ஏன் இப்புடி நடந்துக்குறான்னு புரியல....நான் தான் ஃபங்ஷன்ல வச்சே அவக்கிட்ட விளையாட்டுக்கு தான் பண்ணுவேன்னு சொல்லிட்டனே அப்புறம் என்ன கோவம் இவளுக்குன்னு யோசிச்சிட்டே அவ ரூமுக்கு போனேன்...
அவ பெட்ல அமைதியா உக்காந்துட்டு இருந்தா
"ஏய் என்னாச்சு டி....ஏன் அமைதியாகவே இருக்குற...."னு கேட்டேன்...
அவ என்னைய பாத்துட்டு எதுவும் பேசாம தலைய கீழப்போட்டுட்டு இருந்தா....
"முகி என்னைய பாரு...."னு சொன்னேன்
அவ என்னைய பாத்தா.....
"என்னன்னு சொல்லு...இன்னும் என்மேல உனக்கு கோவம் போகலையா....."
"அதெல்லாம் ஒன்னும் இல்லை கிரிஷ்....என்னன்னு தெரியல ஒருமாதிரி மனசு ஃபுல்லா பாரமா இருந்துச்சு....உன் மடியில நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா...."னு கேட்டா...
"சரி வா படுத்துக்கோ...."னு சொல்லிட்டு அவள என் மடியில படுக்க வச்சிட்டு தலைய தடவிக்குடுத்துட்டு இருந்தேன்....
"முகி....."
"ம்ம்...."
"ரேஷ்மா எதாவது மனசு கஷ்டப் படுத்துற மாதிரி சொன்னாளா...."னு கேட்டேன்
"இல்லை டா....நான்தான் சொல்லுறேன்ல.... நான் ஏன் இப்புடி இருக்குறேன்னு எனக்கே தெரியல...."னு சொன்னா
"சரி தேவையில்லாம கண்டத போட்டு நினைச்சு மனசக் குழப்பிக்காத....நீ தூங்கு எல்லாம் சரியாகிடும்....."னு சொன்னேன்
அவளும் சரின்னு சொல்லிட்டு என் கைய புடிச்சிட்டு என் மடியிலையே படுத்து தூங்கிட்டா .....நானும் அவ தூங்குற வரைக்கும் பக்கத்துலையே இருந்தேன்....
அதுக்கப்புறம் என் ரூமுக்கு போய்ட்டு ட்ரெஸ் மாத்திட்டு பெட்டுல படுத்துட்டு இன்னைக்கு ஃபங்ஷன்ல நடந்ததை யோசிச்சிட்டு இருந்தேன்....நான் முகிய கிஸ் பண்ணுற எண்ணத்தோட அவள தனியா கூட்டிட்டு போகல....அவக்கிட்ட பேசனும் அவக்கிட்ட நான் வேணும்னே பண்ணல சும்மா விளையாடுனேன்னு சொல்லனும்னுதான் கூட்டிட்டு போனேன்....பட் கிஸ் பண்ணுவேன்னு நானே எதிர்பாக்கல....
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...