கிரிஷ் pov:நான் என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிட்டு இருந்தேன்.....கொஞ்ச நேரம் கழிச்சு ரிஷியும் சந்துருவும் சாப்ட போகலாம்னு சொன்னாங்க....
"டேய் போய் சாப்புடலான் டா...."னு ரிஷி சொன்னான்
"சரி டா இரு ஜஸ்ட் அஞ்சு நிமிஷம்....நான் போய் முகிய பாத்துட்டு சாப்டாளான்னு கேட்டுட்டு வந்துடுறேன்...."
"டேய் அவ என்ன சின்ன குழந்தையா டா போய் சாப்டியான்னு கேட்க....சாப்டுருப்பா டா...."னு சந்துரு சொன்னான்
"இல்ல டா உனக்கு தெரியாது....முகிக்கு இந்த மாதிரி பார்ட்டிக்கு போகுறது ஃபங்க்ஷன் அட்டென்ட் பண்ணுறதுனா கொஞ்சம் கூச்சப்படுவா.....நான் நிறைய தடவ பாத்துருக்குறேன்.....என்னோட கெஸ் படி அவ சாப்டாம உக்காந்துட்டு தான் இருப்பா...."னு சொன்னேன்
"சரி டா போய் பாத்துட்டே வா....நாங்க வெய்ட் பண்ணுறோம்....."னு ரிஷி சிரிச்சிட்டே சொன்னான்
நான் முகிய தேடி பாத்தேன் எங்கையும் இல்ல.....நான் அம்மாக்கிட்ட போய் கேட்டேன்....
"மா முகி எங்க....அவ சாப்டாளா...."னு கேட்டேன்....
"தெரியல டா இங்க தான் உக்காந்து இருந்தா எங்க போனா....."னு சுத்தி அங்க இங்கையும் பாத்துட்டே என்கிட்ட சொன்னாங்க
"என்ன மா நீங்க அவள பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல....தெரிஞ்சும் தனியாவா விடுவீங்க....நர்மதா நவீன் நீங்க பாத்திங்களா..."னு கேட்டேன்...
"இல்ல அண்ணா நான் பாக்கல...."னு சொன்னாங்க
"என்ன மா நீங்க....அவள காணோம் பாருங்க....."னு சொன்னேன்
"டேய் இங்கதான் டா எங்கையாவது இருப்பா....நீ ஏன் இவ்வளோ டென்ஷன் ஆகுற.....அவ என்ன சின்னக் குழந்தையா தொலஞ்சு போறதுக்கு....."னு அம்மா சொன்னாங்க...
என் ஃபீலிங்க்ஸ் கண்டிப்பா அம்மாக்கு புரியாது....அதுனால நான் எதுவும் சொல்லாம முகி எங்க இருக்கான்னு பாக்க போய்ட்டேன்.....அவள இங்க கூட்டிட்டு வரக்கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா ரிஷிக்காக தான் அவள வர சொல்லி அம்மா கம்பெல் பண்ணும்போதுக்கூட நான் எதுவும் சொல்லவே இல்ல....
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...