மூன்று வருடங்களுக்கு பிறகு.....
முகி pov:
"ஏய் முகி லேட்டாச்சு டி ஏர்ப்போர்ட் போகனும்.....சீக்கிரமா எந்ததிரிச்சு கிளம்பு....."னு சுதா மா வந்து எழுப்புனாங்க....
"மா ஏன் இவ்வளோ சீக்கிரம் வந்து எழுப்புறிங்க...."னு நான் கண்ணத் திறக்காமலே அம்மாக்கிட்ட கேட்டேன்....
"ம்ம் ஆமா இப்போதான் விடிஞ்சிருக்குது பாரு....மணி ஏழு டி...."னு சொன்னாங்க
"என்னது ஏழா....ஏன்மா முன்னாடியே எழுப்ப மாட்டிங்க.....ஏன் இப்புடி லேட் பண்ணிட்டிங்க...."னு சொல்லிட்டு வேக வேகமா கிளம்பப் போய்ட்டேன்....
என்னங்க காலையிலையே இவ்வளோ பரப்பரப்பா எங்கக் கிளம்புறேன்னு பாக்குறிங்களா....அதை சொல்ல எனக்கும் ஆவளாதான் இருக்கு ஆனா நான் இப்ப சொல்ல மாட்டேன் ஏன்னா எனக்கு லேட் ஆச்சு நான் கிளம்பிட்டு வந்து சொல்லுறேன்.....கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க😋😋
நான் அம்மா சுப்பு அப்பான்னு எல்லாரும் ஏர்ப்போர்ட் போய்ட்டு வெய்ட் பண்ணிட்டு இருந்தோம்.....நான் வெய்ட் பண்ணிட்டு இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் என் ஹார்ட் பீட் ஏறிக்கிட்டே போச்சு.....
யாருக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்குறேன்னு இப்ப நான் சொல்லல என்னைய திட்டித் தீத்துருவிங்கன்னு தெரியும்....அதுனால சொல்லுறேன்.....
நாங்க எல்லாரும் க்ரிஷ்காகத் தான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்குறோம்....ஒரு வர்ஷம் கழிச்சு இப்போதான் திரும்ப வரான்....
காலேஜ் முடிச்சதும் க்ரிஷ் அப்பாக்கிட்ட கொஞ்ச நாள் அசிஸ்டென்டா இருந்தான்....அப்பா அவருக்கிட்ட அசிஸ்டெண்டா இருக்குறத விட தெரியாதவங்க வேற யாருக்கிட்டயாவது போய் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு சொல்லிட்டு அவரோட ஃப்ரெண்டு டெல்ஹில பெரிய லாயர்னு அவர்க்கிட்ட கிரிஷ அனுப்பி வச்சிட்டாரு....இப்போதான் திரும்ப வரான்....இந்த மூனு வர்ஷம் எப்புடி போச்சுன்னே தெரியல....ரொம்ப சீக்கிரம் போய்டுச்சு....
இந்த மூனு வர்ஷத்துல எங்களுக்குள்ள சின்ன சின்ன சண்டை....கொஞ்சம் ரொமேன்ஸ் கொஞ்சம் இல்ல நிறையவே ரொமேன்ஸ்😂😂.....எல்லாம் கலந்த ஒரு அழகான தருனமா எங்களுக்கு இருந்துச்சு....ரெண்டு பேரும் அவ்வளோ சந்தோஷமா இருந்தோம்....எங்களுக்குள்ள இருந்த நெருக்கம் அதிகமாய்டுச்சுனே சொல்லலாம்.....
YOU ARE READING
நறுமுகை!! (முடிவுற்றது)
General Fictionஎன்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அ...