திருமணக்காதல் 19

743 36 0
                                    

மறுநாள் காலை...

மச்சீ அம்மா போன் பண்ணாங்களா - அசோக்
ம்ம்.. இன்னும் 2 மணி நேரத்துல ரீச் ஆகிடுவாங்களாம் - ப்ரித்வி
ஓ.. சரி ஓகே - அசோக்

ப்ரித்வி அம்மா வந்துட்டாங்களாம்.. கொஞ்சம் பிக்கப் பண்ணிட்டு வரியா - யாமினி
ம்ம்.. சரி - ப்ரித்வி

மச்சீ.. நீ போவாத டா.. நா போற - அசோக்

ஏன் டா - ப்ரித்வி
டேய் நீ போன.. பேசியே கொன்றுவாங்க.. நானே போற - அசோக்
அதுவும் கரெக்ட் தா.. நீயே போ - ப்ரித்வி

சிறுது நேரம் கழித்து.. சசிகலா (யாமினியின் அம்மா ) வீட்டிற்கு வந்து சேர்ந்தார்...

வாங்கம்மா .. - AM
ம்ம்.. எப்டி இருக்க - சசிகலா
ம்ம்.. நல்லா இருக்கம்மா - AM

சரி... போய் ஒரு காஃபி போட்டு கொண்டு வா - சசிகலா
ம்ம்.. சரிங்கம்மா - AM

வாங்க அத்தை.. எப்டி இருக்கீங்க - ப்ரித்வி
ஏதோ இருக்க.. இந்த மாதிரி வாழ தெரியாத பொண்ண பெத்துட்டு எப்டி நிம்மதியா இருக்க முடியும் - சசிகலா

அம்மா.. கொஞ்சம் சும்மா இரு - யாமினி
அப்டிதான இருக்க.. ஆமா ப்ரியா எங்க - சசிகலா

பக்கத்துல போயிருக்கா.. வந்துடுவா - அசோக்

நா இன்னைக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்க பாருங்க ஐஸ் கிரீம்..🍦 என கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ப்ரியா...

பெரி..பெரியம்மா.. எப்போ வந்திங்க.. எப்டி இருக்கீங்க - ப்ரியா

ம்ம்.. இருக்க.. இப்படித்தான் தெரியாத இடத்துக்கு வந்து தனியா வெளில போறதா.. யாரையாச்சும் கூட்டிட்டு போனா என்ன - சசிகலா

இல்ல.. அது பக்கத்துலதான் போன - ப்ரியா
ம்ம்.. அண்ணி எப்போ வராங்க - சசிகலா

இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவாங்க - ப்ரித்வி
சரி.. நா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வர என கூறி மேலே சென்றார் சசிகலா..

அவர் சென்றதும்..

அப்பா.. நல்ல வேலை மச்சீ.. நா ப்ரியாவ லவ் பண்ண.. யாமினிய லவ் பண்ணிருந்தா என் நிலைமை என்ன ஆயிருக்கும்..😶 பாவம் யாமினிய கட்டிக்க போறவன் - அசோக்

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Donde viven las historias. Descúbrelo ahora