மறுநாள் காலை.. 🌄
தூக்கத்திலிருந்து கண் விழித்தவள் அருகில் படுத்திருந்த ப்ரித்வியை ஒரு பார்வை🙄 பார்த்துவிட்டு குளிக்க சென்றாள்.
போனின் சத்தத்தில் தன் நித்திரையிலிருந்து மீண்டான் ப்ரித்வி..
சொல்லு டா - ப்ரித்வி
டேய் என்ன டா ஆச்சு😟.. க்லைன்ட் என்ன சொன்னாங்க ப்ராஜக்ட் ஓகே யா... நைட்லா தூக்கமே இல்ல டா எவ்ளோ முக்கியமான ப்ராஜக்ட் - அசோக்
டேய்.. டேய் போதும் டா.. எல்லாம் சப்மிட் பண்ணிட்ட பாத்துட்டு சொல்றாங்களாம்.. எனக்கு தெரிஞ்சி ஓகே ஆயிடும்👍 - ப்ரித்வி
ஹே சூப்பர் டா.. சரி நாங்க இன்னும் டு டேஸ்ல வந்துடுவோம் - அசோக்
என்ன டா இவ்ளோ சீக்கிரம் - ப்ரித்வி
இங்க ரொம்ப போர் டா - அசோக்
அத்தை எப்டி விடுவாங்க - ப்ரித்விஅதெல்லாம் சொல்லியா தரணும் எக்ஸாம் அது இதுனு சொல்லிட்டு வந்துடுவோம் - அசோக்
ம்ம்.. சரி டா வாங்க - ப்ரித்வி
சரி சரி ப்ரியா கூப்புரா நா அப்றம் பேசுற - அசோக்சரி டா.. என போனை கட் செய்தான்..
அப்பா... என்ன தலை இப்டி வலிக்குது ஆ😥.. கண்ணு வேற எரிது என இவன் புலம்பி கொண்டிருக்க.. ஸ்ரீ குளித்து விட்டு வெளியே வந்தாள்..
அமிர்தா ஒரு காஃபி போட்டு தரியா தலை வலிக்குது - ப்ரித்வி
ம்ம்.. கொண்டு வர என சமையல் அறைக்குள் நுழைந்தவள் பத்து நிமிடங்களில் காஃபியை கொண்டு வந்து ப்ரித்வியின் அருகில் உள்ள டேபிளில் வைத்தாள்☕..
அதை எடுத்து பருகியவன்.. இன்னும் ரெண்டு நாள்ல எல்லாரும் இங்க வந்துடுவாங்களாம்..
ஓ.. சரி ஓகே கிட்சன்ல வேலை இருக்கு நா போற 😶 என பதிலை எதிர் பார்க்காமல் சமையல் அறைக்குள் நுளைந்தாள்..
அவள் செல்வதையே பார்த்தவன் காஃபியை அருந்திவிட்டு குளிக்க சென்றான்..
YOU ARE READING
💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
RomanceHi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️