Hi frds.. this is my first story...
Read, like and comment
இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை,
பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்..
♥️sumi♥️
Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.
அழகான மெரூன் கலர் லெகேங்காவும் அதற்கு ஏற்றார் போல அணிகலன்களையும் அணிந்து தேர்ந்தெடுத்த அழகியல் நிபுணர்களின் கை வண்ணத்தில் தேவதையாக தோற்றமலித்தால் அமிர்தஸ்ரீ.. 👸
ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டாரும் பொண்ணு வீட்டாரும் தட்டு மாற்றி நிச்சயம் பண்ண நிலையில் நேராக கோவிலுக்கு சென்று மண்டபத்திற்குள் வந்தாள் அமிர்தஸ்ரீ...
மங்கள நாதங்கள் ஒலிக்க.. தனது அடுத்த அத்தியாயத்தில் முதல் படி வைத்து அனன்.. அனிதா.. கவிதா.. அம்மா.. அக்கா.. என அனைவருடனும் நடந்து வந்தாள் அமிர்தா...
ஸ்ரீ என்ன டி இது🙄 - அனன் நானும் அதையேதான் யோசிக்குற.. மண்டபம் மாத்தி வந்துட்டோமா.. - ஸ்ரீ
ஓ.. என்ன அனன் இது.. இவ்ளோ பெரிய மண்டபம்.. இதை சுத்தி பாக்கவே ஒரு நாள் ஆகும் போல.. - ஸ்ரீ
ஆமா ஸ்ரீ.. கார் பார்க்கிங் மட்டும் எவ்ளோ பெருசா இருக்கு பாரு டி - அனன் அவ்ளோ பெரிய அப்பா டக்கறா டி ப்ரித்வி - ஸ்ரீ
நானும் அதே டவுட்லதான் இருக்க - அனன்
ஸ்ரீ நீ ரொம்ப குடுத்து வெச்சவ டி.. பாத்தியா - வெண்பா அவளை பார்த்து புன்னகைத்தவள்..
சிம்பிளா மேரேஜ் பண்ணனும்னு ஆசை பட்ட எனக்கு இப்டி நடக்குது.. பெருசா பண்ணனும்னு என் அக்கா ஆசைப்பட்டா அவளுக்கு கோவில நடந்தது.. என்ன கொடுமை 🤦 அனன் இது - ஸ்ரீ
சரி.. சரி இன்னைக்கும் புலம்பி தள்ளாத.. பொண்ணா அடக்க ஓடக்கமா நடந்து வா - அனன்